12/06/2010

சுழன்றிடும் உலகில் உயிர் பெற்றிடும் நாடு


Align Center
நடை பிணமானோம்
நாட்டினை இழந்தோம்
வெட்கமின்றியே
மூச்சினை விடுறோம்

சுதந்திரம் இல்லை
சொந்தமண் எங்கே
சிறையினில் வாழும்
வாழ்வில் பயனில்லை

உயிர்களை இழந்தோம்
உடைமைகள் தொலைத்தோம்
உண்மையை சொன்னால்
சாக சடம் ஆனோம்

மற்றவர் கையை
நம்பியே கெட்டோம்
மானத்தை தொலைத்த
மனிதர்கள் ஆனோம்

இலச்சிய தாகம்
சூழ்ச்சியால் சாவு
சுழன்றிடும் உலகில்
உயிர் பெற்றிடும் நாடு

11/27/2010

கார்த்திகையில் ஒரு தீபம் மனதில் ஏற்றுவோம்


வட துருவத்தில்
ஓளி அணைந்ததால்
உலகிலேயே இருள் சூழ்ந்தது

நீர் சொரியும்
கண்களிலேலாம்
ஒரு ஒருவம் தெரிந்தது

இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்

இதயம் எல்லாம்
ஓளி ஏற்றும்
உலகம் படைத்தவன்

அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்

கார்த்திகையில்
ஒரு தீபம்
மனதில் ஏற்றுவோம்

11/25/2010

உன்னில் தலைசாயா ஆசையடா


முற்றத்து மரங்களிலே
முக்கனிகள் பழுத்திருக்க
சுற்றத்து கண்களெல்லாம்
கனி பறிக்க காத்திருக்க

ஊர் சுற்ற வந்த மச்சான்
எனை பறித்து போனதென்ன
என் மனதிற்குள் புகுந்ததென்ன
மனசோடு சேர்ந்ததென்ன

மரம் சுற்றும் கிளிகளெல்லாம்
பழம் தின்ன வந்ததென்ன
உனைப்பார்த்த பின்னாடி
மனம் மாறிப்போனதென்ன

தலைவாசல் ஓரத்தில்
விழி பார்த்து வீற்றிருந்தேன்
உன் வழிகான காத்திருந்தேன்
உன் மனம் சேர தவமிருந்தேன்

கிளி பார்த்த போதினிலே
கனி ஆசை கொள்ளுதடா
எனைக்கடிகாமல் விடுவாயோ
தவிப்பாக உள்ளதடா

உன்னில் தலைசாயா ஆசையடா

11/22/2010

காதலின் குழந்தைகள் சொர்க்கத்திற்கு சொந்தமாக


இளம் கீற்றின் சுகம்
காற்றின் வழி வந்து
விழி மூட

இதயத்தின் இசைமீட்டல்
மெல் இதமாக
சுகம் சேர்க்க

என் சுவாசக்காற்று
உன் உடல் வருடி
சிலிர்க்கவைக்க

காதலின் குழந்தைகள்
சொர்க்கத்திற்கு
சொந்தமாக

????????????????
???????????
??????

காலையில் சூரியன்
உத்திதான்
சோம்பல் முறித்து

11/17/2010

வாழ்விலும் நீயே சாவிலும் நீயே



நித்தமும் உன்னை தொட்டிடதானே
நெஞ்சினில் காதல் வளர்த்தேன்

சொல்வதும் ஒன்று செய்வதும் ஒன்று
இதழ் கூப்பிடதானே துடித்தேன்

பெண்மையே உன்னை போற்றிடதனே
கண்களின் இமைக்குள் வைத்தேன்

பிறந்ததும் எனக்கு வளர்ந்ததும் எனக்கு
உன்னை தாங்கிடும் பொறுப்பை ஏற்றேன்

சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்

வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்



கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

11/14/2010

இதயம் வரை காதல்



என் படுக்கையறை
கனவுகளின் தோட்டம்
நீண்ட இரவுகள்
வேதனையின் ஆளம்

இரு விழிகளும்
சூரியனின் சொந்தம்
இதயம் வரை
காதலின் வேதம்

இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும்

11/09/2010

வசியமில்லா காதலால் ருசிக்கமுடியா இரவுகள்



கடல் புரண்டு தரையானாலும்
மனம் உடைந்து துரும்பானாலும்
பிடிவாத குணம் படைத்தாய்
பிழையானத்தை ஏன் தொடுத்தாய்

உடலிலே ஒன்றுமில்லை
மனசும் உணர்வும் இரண்டும் உண்மை
தடையாக ஏன் நினைத்தாய்
தடுக்காமல் ஏன் துடித்தாய்

பிரிவென்றால் விருப்பமில்லை
சேர்ந்துவாழ முடியவில்லை
எதற்காக் இணைத்துக்கொண்டாய்
இணைந்தபின் ஏன் உதைந்தாய்

கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/27/2010

நீ ஆணாக பிறந்ததனால் அப்படி என்ன கண்டுவிட்டாய்

உதட்டோரம் விழுவதெல்லாம்
உணர்வுள்ள வார்த்தைகளே
என் கழுத்தோடு கொடிகட்டி
துணையாக தொட்டது ஏன்

உனக்காக மாறவேண்டும் என
நீ எதற்காக நினைக்கின்றாய்
நீ ஆணாக பிறந்ததனால்
அப்படி என்ன கண்டுவிட்டாய்

எனக்கென்று தனி உணர்வு
அதற்குள்ளே பெரும் கனவு
அதை உணரக்கூட தெரியாமல்
ஆணாக ஏன் பிறந்தாய்

உடலிலே வலிமை கொண்டு
உணர்விலே வன்மைகொண்டு
அழகான பெண்மை என்னை
அடக்கி ஆள ஏன் வந்தாய்

மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன்

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/14/2010

காமம் கொண்ட கண்களினால் சேலை உரிந்து போகின்றது


நான் உரைக்க போவதெல்லாம்
நாவிலுள்ள உண்மைகளே

நலிவுற்று இருந்தாலும்
தளராத உறுதியுடன்
மெலிவுற்று இருந்தாலும்
கலங்காத கண்களுடன்

ஒரு சேலை தலைபெடுத்து
உடல்முழுக்க சுத்திவிட்டு
மானத்துடன் நிமிர்கின்ற
மறத்தமிழ் பெண்மணி

ஊர் விட்டு ஓடிவந்து
உற்றவரை நான் இழந்து
கைக்குழந்தை கதறலுடன்
கை ஏந்தி நிற்கின்றேன்

ஒருமுறை பசி போக்க
ஒன்பது இடம் ஏறிவிட்டேன்
ஒவ்வொரு இடமும் புதுசெனக்கு
ஒவ்வொரு கதையும் பழசெனக்கு

பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/10/2010

தமிழினம் ஆண்டிடும் நாடு

நாவினில் ஊரும் நற்மிழ் கவிதை
பாவினில் புலம்பும் சொ
ற்களின் இனிமை
வாழ்வினில் கிடைக்கும் அனுபவக்கோவை
வந்திடும் கவிதையாய் செந்தமிழ் மேடை

தமிழினும் இனிது உலகினில் இல்லை
தமிழினை கொள்பவர் உலகினில் கொள்ளை
சுழன்றிடும் நாவில் சுட்டிடும் உண்மை -
செந்
தமிழினை காத்திட நெஞ்சினில் வன்மை

நெஞ்சினில் குண்டு பாய்ந்திடும் போதும்
செத்துமே உடல் சாய்ந்திடும் போதும்
செவ்விதழ் உதடுகள் தமிழென உரைக்கும்
தமிழினை காத்திட இரத்தத்தை இறைக்கும்

சத்தியம் என்பது சரித்திர உண்மை
வேள்விகள் செய்வது தமிழனின் கொள்கை
உண்மைகள் ஒரு நாள்
சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/03/2010

காதலால் ஆதலால் கண்

10 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கண்களுக்குள் தூசு போகாமல்

18 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உனை பார்க்கும் கண்களுக்குள்
தூசு போகாமல்

28 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உன் கண்களுக்குள் தூசு போகாமல்

38 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
எம் செல்லகண்ணின்
கண்களுக்குள் தூசு போகாமல்

78 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கடைசிவரை வருபவளை
கண் கொண்டு பார்பதற்கு


9/29/2010

என் படுக்கையறை ரகசியங்கள்


தூக்கம் வந்து தூங்கவில்லை
தூங்காவிடில் கண்கள் கலங்கிவிடும்
* * *
குளிர்வதால் போர்க்கவில்லை
சோகத்தை மறைக்க போர்க்கிறேன்
* * *
சுகத்திற்கு தலையணை வைக்கவில்லை
என் கண்ணீரை உருஞ்ச வைக்கிறேன்
* * *
வசதிக்கு மெத்தையில் தூங்கவில்லை
உனை தாங்கும் நெஞ்சம் இதமாக தூங்க .....

9/27/2010

என் தலையணை ரகசியம்


1

என் காதல் கசங்கியது போல்

தலையணையும் கசங்கியுள்ளது
காலையில்

* * * * * * *
2

உன் நெஞ்சில்ஈராம் இல்லாததால்
என் தலையணை முழுக்க ஈராம்
முழு இரவும்

9/24/2010

முதல் இரவில் ஒரு கவிதை


செல்ல செல்ல பார்வையால்
மெல்ல மெல்ல மோதி
சின்ன சின்ன புன்னகையாள்
நெஞ்சம் வரை தாவி
கள்ள கள்ள தொடுகையால்
காதல் பரிமாறி
வெட்க்கபடும் போதினிலே
நான் வெற்றி கொண்டேன்
பூங்குயிலே

9/22/2010

நான் பித்து பிடித்து திரிகின்றேன்


சின்ன மழைத்துளி
யன்னலில் முட்டிமோதி
நெஞ்சத்தை தொட்டுப்பார்க்க

ஒற்றை உருவத்தில்
இரு விழிகள்
ஓராமாய் எட்டிப்பார்க்க

மெல்ல நடையில்
குடைபிடித்து
இடை அசைத்து போறாள்

சொல்ல வரியின்றி
சொர்க்க வரிகளை
தேடுகின்றேன்

வெல்ல வழியிருந்தும்
பித்து பிடித்து
திரிகின்றேன்

9/20/2010

காத்திருக்கிறேன் அன்புத்தோழி


பொத்தி வைத்த காதல் மொட்டு
முட்டி மோதி பூக்குதிங்கு
வெட்கத்துடன் நாணம் சேர்த்து
வெட்டும் வாளாய் குத்துது இங்கு


சொந்தக்ககனவுகள் சேர்த்துவைத்து
சொல்லவளியின்றி காத்திருந்து
சொந்தமானதும் சொல்லப்போறேன்
ஜோடி சேர்ந்து வாழப்போறேன்


தொட்ட இடத்தில் முத்தமிட்டு
தொடாத இடத்தில் கன்னமிட்டு
மொட்டு வைத்த காதல் மழையாய்
சொட்டு சொட்டாய் தூரப்போறேன்


சொந்த மன்னவன் எந்தன் மடியில்
சொர்கவைக்கும் உதடுசிரிப்பில்
சொல்லவந்ததை சொல்லிவிடுவான்
சொல்லாமலே அள்ளிவிடுவான்

9/16/2010

நான் சித்தனாய் போனதென்ன


யன்னல் வழி கண்கள் பார்க்க
காதல் வரி தானாய் கொட்ட
கவிதையான மாயமென்ன
மனதை தொட்ட காதலென்ன

சாரல் துளி எட்டிபார்க்க
யன்னல் கதவு தானாய் மூட
நெஞ்சை மூடி வைப்பதென்ன
கன்னமிட்டு பார்பதென்ன

தன்னந் தனி தனிமையிலே
சின்னவிழி பூங்குயிலே
சிலிர்த்து விட்டு போவதென்ன
நான் சித்தனாய் போனதென்ன

9/15/2010

செந்தமிழ் நாளை ஆண்டிடும் உலகை



எழுதுவது என் இலக்கு - என்
இனத்தினது பொருள் விளக்கு
அகத்தினிலே இருள் அகற்று
உண்மைக்கு நான் பொறுப்பு

செந்தமிழ் வீரம் பகை அடக்கு

சிந்திய குருதியில் தமிழ் எழுத்து
வரும்பகை முடிக்கும் படை நடத்து
தரணியில் நீயே தமிழ் நடப்பு

சாவினில் கூட தாகம் உண்டு

சரித்திரம் படைத்திடும் வேகம் இயம்பு
வீழ்தலில் வீரம் குறைவதில்லை
வீழ்
தபின் உயர்ந்தவர் உலகினில் கொள்ளை

தாயினும் மேலாம் தாயக கனவு

மாண்டவர் மூச்சில் வென்றிடும் வீச்சு
சுதந்திர காற்றை சுவாசிக்கும் குழந்தை
செந்தமிழ் நாளை ஆண்டிடும் உலகை

9/06/2010

ஆதியும் நீ அந்தமும் நீ

நான் எழுத நினைத்த
கவிதை
நீ

நான் சொல்ல நினைத்த
காதல்
நீ

செம்மலர் இதழ்
தேனில்
நீ

செந்தமிழ் தரும்
பாவில்
நீ

வென்நிலா வாழும்
விண்ணில்
நீ

வீரர் நடைபோடும்
மண்ணில்
நீ

வெட்டி விளையாடும்
கண்ணில்
நீ

என்னை வெல்லவந்த
வேங்கை
நீ

8/30/2010

புழுதியாய் போகும் மனிதன்


நிலையற்ற வாழ்கையில்
நிலையானதை தேடி
விலையற்ற அன்பை
விலை கொடுத்து வாங்கும்
மூலையற்ற மனிதன்

நிறம் பார்த்து பழகி

நிலை கண்டு பேசி
நிழலான வாழ்க்கையில்
நிஜமானதை இழக்கும்
நிம்மதியற்ற மனிதன்

புறம் பேசி வாழ்ந்து

மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி
நிரந்தரத்தை மறக்கும்
மந்தையான மனிதன்

பொருள் தேடி வாழ்தல்

பெரும் புகழ் என்று எண்ணி
நல் பொழுதுகளை இழந்து
புழுதியாய்
போகும்
புகழற்ற மனிதன்

8/26/2010

தமிழ் கைதியின் காதல் கவிதை


அன்று
வயல்களும் வரப்புகளும் ஊடறத்துசெல்லும் ஊரிலே
எனது எண்ணங்கள் அதையும் தாண்டிச்சென்று
என்னவளின் ஊரை மேய்ந்துவிட்டு வரும்

இன்று
முட்கம்பி வேலிகளும் காவலரன்களும்
முளைத்திருக்கும் முழத்துக்கு முழம்
என் எண்ணங்களும் முடங்கிவிடும்

காதலியும் இல்லை அவள் ஊருமில்லை
கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்
விடுதலை ஆகியும் பயனில்லை

சிறை கூட்டில் இருந்து சிறைக்குள் விடிவிப்பது
விடுதலையும் இல்லை

8/23/2010

காதலே கொடுமையின் வேட்டை




இரவுகளின் இருள் விளிம்பில்
கனவுகளின் கோட்டை


தனிஉருவம் விழித்திருந்து
தேடுது தன் வாழ்வை


காதலின் சந்தோசங்கள்
கற்பனையின் மூட்டை


காத்திருக்கும் நாட்களில்
காதலே கொடுமையின் வேட்டை

8/16/2010

காதல் மொழி


உருகிய நீர்த்துளிகள்
கண்களினதா

பேசிய வார்த்தைகள்
உதடுகளினதா

இதயத்தின் துடிப்பு
காதலினதா

காக்கவைத்த நான்
காதலனா

காத்திருந்த நீ
காதலியா

ஏக்கத்தின் நிமிடங்கள்தான்
காதலா

ஏங்கவைத்து பார்பதுதான்
ஊடலா

செல்லககன்னம் சிவப்பதுதான்
கோபமா

சிவந்த உதடு சிரிப்பதுதான்
கூடலா

நெஞ்சோடு தலை வைப்பது
கெஞ்சவா

அண்ணார்ந்து முகம் பார்ப்பது
கொஞ்சவா

தோளில் கை போடுவது
அணைக்கவா

தொடாமலே கண் பார்ப்பது
...........


8/12/2010

காதலே என் தெய்வம்



காதோரம் பதில் சொல்ல
காற்று காற்றுக்கென்ன வெட்க்கம்


உன் காதலை அள்ளிவந்த
மூச்சுக்கென்ன தயக்கம்


கண்களில் தெரிந்திடும்
காதலின் ஸ்பரிசம்


என் எண்ணங்களில் எல்லாம்
உன்னை கொல்லைகொள்ளும் திட்டம்


முந்துவதை நினைக்கையில்
நெஞ்சு முழுக்க தயக்கம்


முந்திவிட்டேன் அன்பே
உன்காதலே என் தெய்வம்

8/11/2010

எம் இனமே அப்படிதான்

இருண்ட வாழ்வில்

இதிகாசம் தேடும்

இடம்பெயர் அகதிகள்

எம் இனமே அப்படிதான்


சொந்த இடத்தில்தான்

இருக்கிறோம்

சொத்து சுகத்துடந்தான்

இருக்கிறோம்


எம் சொந்த உணர்வைவிட்டு

உரிமயைவிட்டு உறவைவிட்டு

உண்மையைவிட்டு - நீண்டதூரம்

இடம்பெயர்ந்துவிட்டோம்



எம் இனமே அப்படிதான்

8/10/2010

தாசியான தமிழினம்

கதறிய உள்ளங்களில்

கிளறிய வேதனைகள்

புகைந்து சாம்பலாகமுன்

முட்கம்பி வேலி வாழ்வானது


முடங்கிய உணர்வுகளில் - புது

உணர்ச்சிகள் வரமுன்னர்

சிதைந்தது எண்ணங்கள்

உயிர் கலைந்த சாவுகள்


உடலிருக்கு உயிர் இருக்கு

நரம்பிருக்கு எலும்பிருக்கு

உணர்வு தொலைத்த வெறும் கோதுகள்

இரத்தமில்ல உயிர் கோலங்கள்


கடலிருக்கு வயலிருக்கு

குளமிருக்கு நிலமிருக்கு

தொடமட்டும் முடியாத நாதாரிகள்

தொட்டாலும் கொன்றுவிடும் சூதாடிகள்


மூச்சுமட்டும் எடுக்கமுடியும்

முகம்கூட சுளிக்கமுடியா

முகம் இருக்கும் முழு முண்டங்கள்

மனம் முழுக்க இரத்த வாடைகள்


என் நிலமிருக்கு தொழிலிருக்கு

சுய கௌரவம் நிறைய உண்டு

பொத்திட்டு இருடா பரதேசி

நான் உன்னை ஆளும் இனவாசி


நான் பொருள் தருவேன்

பொதி தருவேன்

பொத்திட்டு வாங்கடா

என் ஆட்சியில் நீ தாசி

8/09/2010

காதலால் உருகி கண்ணீர் மல்கி



விழிகளின் கதிர்களில் ஏக்கம்

விரும்பியே துடிக்குது இதயம்

உதடுகள் உரசிடும் பருவம் - மனம்

காதலால் குளைந்த அருவம்


பார்கமுன் முடிக்கவா வெட்கத்தை

முடித்தபின் பார்கவா மிச்சத்தை

நினைக்கமுன் ஏங்குது கனவுகள்

நினைக்கவே மயக்குது வனப்புகள்


தடுப்பது மனம்தான் மறந்துவிடு

தற்பொழுது காதலை பெற்றுவிடு

கண்ணை மூடினால் உலகம் இருட்டு

காதலில் விழுந்தபின் கண்கள் குருடு

8/02/2010

காதலா



கொஞ்சி கொஞ்சியே

குலையவைக்கும்

உன் காதல்

நெஞ்சதூடு இதயம் தேடும்

உன் கண்கள்

மிச்சமின்றி

சுவாசித்து முடிக்கும்

உன் மூக்கு

சத்தமின்றி சல்லடைபோடும்

உன் சிரிப்பு

வெட்கமின்றி சொல்லுகிறேன்

காதலா

எனை வென்றுவிட்டு போவதே

என் வாழ்வடா

7/29/2010

புதிதாய் காதலிப்பதற்கு



அடிக்கடி கோபம் போடுகிறேன்

ஒவ்வொருமுறையும்

புதிதாய் காதலிப்பதற்கு


அடிகடி விடைபெறுகிறேன்

தவிப்பில் ஓடிவந்து

கட்டியணைப்பதற்கு

7/27/2010

கன்னக்குழியில் காதல்



உன்னை நினைத்து சிரிக்கையில்
கன்னக்குழியில்
காதல் நிறைகிறது

7/20/2010

நட்பு



நடப்புக்கு முள்ளுக்குதினாலே
நான் நனைவேன்
கண்ணீரால்

7/18/2010

அன்புள்ள அன்னையே




உணர்ந்தேன் உன் உதிரமே பால் ஆவதை

மகிழ்ந்தேன் உன் உயிரே நானானதை

தொழுதேன் உனை தாயிலும்மேலாகவே

அன்புள்ள அன்னையே

7/13/2010

என் காதல் சோகம் எனக்கு மட்டும்தான்



7/08/2010

தோழியின் நினைவில்

7/05/2010

காதல் நிலைத்திருக்கும்

6/30/2010

காதலுக்காக சாவேன்

6/03/2010

தமிழ் இனத்துக்காய்

நெஞ்சை கிழித்து

இதயத்தை எடுத்து

கையிலே கொடுப்பேன் !

ஒரு இனத்தை

அது வாழ்ந்த மண்ணில்

எச்சத்தைகூட

மிச்சம் விடாமல்

கொன்று குவித்தது

மாபெரும்

இன படுகொலை என

முழு உலகமும்

ஏற்றுக்கொள்ளுமெனில்

6/01/2010

நெஞ்சுருகும் காதல்

5/24/2010

தலைப்பு செய்தி

5/19/2010

இறுதி பிணத்தின் புலம்பல்

நான் பார்துக்கொண்டிருக்கவே

என் உயிர் பிரிவதை

என் கண்களால் பார்த்தேன்


நான் பார்க்காமலே

பல உயிர் கொல்லப்பட்டுவதை

என் காதுகளால் கேட்டேன்


மரண ஓலத்தின் மத்தியில்

சதை பிண்டங்கள் துடிப்பதை

எல்லோரும் பார்த்தார்கள்


ஒரு இனமே எரிந்து

கருகி சாவதை

உலகமே பார்த்தது


அனுதாபப்வடுவதை விட

வேறு என்னதான்

செய்ய முடிந்தது


போங்கடா நான் என்னைத்தவிர

வேறு யாரையும் நம்புவதில்லை

அடுத்தபிறப்பில்

5/01/2010

அனியாயதமிழ் இனம்


அனியாய ஐனநாயத்தில்


அகப்பட்ட தமிழ் இனம்


விடியாதவரைக்கும்


விலங்குகளுக்கு வேலை

3/22/2010

பெண்களின் வாழ்க்கை


3/15/2010

காதலின் சாறு


3/12/2010

கடைசியில் ஒரு கவிதை


3/09/2010

காதல் இல்லா உலகில்

2/15/2010

காதலின் கண்ணீர்



2/11/2010

காதலர் கண்ணீர்


காதலர் தின வாழ்த்துக்கள்


2/08/2010

உயிரை கொடுத்தது உன் பிறப்பு

2/04/2010

கட்டில் காதல்

2/02/2010

உயிர் காதல் தா

1/26/2010

தாய்மையின் சாதனை

1/25/2010

நில் கவனி காதல்

1/19/2010

காதல் பிறந்தது

1/11/2010

பொங்கல் வாழ்த்து

1/05/2010

அதிகாலை காதல்



1/03/2010

அர்த்தநாதீஸ்வரர் பிள்ளை