9/29/2010

என் படுக்கையறை ரகசியங்கள்


தூக்கம் வந்து தூங்கவில்லை
தூங்காவிடில் கண்கள் கலங்கிவிடும்
* * *
குளிர்வதால் போர்க்கவில்லை
சோகத்தை மறைக்க போர்க்கிறேன்
* * *
சுகத்திற்கு தலையணை வைக்கவில்லை
என் கண்ணீரை உருஞ்ச வைக்கிறேன்
* * *
வசதிக்கு மெத்தையில் தூங்கவில்லை
உனை தாங்கும் நெஞ்சம் இதமாக தூங்க .....

21 comments:

சௌந்தர் said...

ரகசியத்தை ஏன் வெளியே சொல்றீங்க

யாதவன் said...

சௌந்தர் said
//ரகசியத்தை ஏன் வெளியே சொல்றீங்க //

அதுவும் சரி தான் நான் ஜோசிக்கவில்லை
இனிமேல் சொல்லமாட்டன்
நன்றி உங்கள் வருகைக்கும் அழகான அன்பான வாக்குக்கும்

Lakshman said...

ஏன் இந்த சோகம் ? காதல் அவஸ்தைகள் வேண்டாம் அண்ணா. உங்கள் தலையணை நெருப்பாக உங்களை சுட வேண்டாம். உங்கள் கண்கள் கலங்கவும் வேண்டாம்.

மோனி said...

இது என்னய்யா டைட்டில் ?
”பிட்” படம் மாதிரி ??

:-)

யாதவன் said...

மோனி
ஹ ஹ ஹ என்ன ஏமாந்து போனிங்களா
நன்றி உங்கள் வருகைக்கு

"ராஜா" said...

இங்கயும் சோகமா .. முடியல

Anonymous said...

தாங்கலைப்பா இந்த காதல் படுத்தும் பாடு....

வெறும்பய said...

அப்போ நீங்க தூங்குறதே இல்லையா...

Chittoor.S.Murugesan said...

தலையணைக்கு இப்படி ஒரு உபயோகமா? சூப்பர்

மைந்தன் சிவா said...

என்னாச்சு யாதவன்??பீலிங்??

வினோ said...

nalla irukku.. koncham sookamaa irukku.. (No tamil here in office)

நந்தா ஆண்டாள்மகன் said...

நல்லா இருக்கு நண்பா

ஹேமா said...

கவிக்கிழவரே....சௌந்தர் பக்கத்தில வந்து பொண்ணுங்களைக் கிண்டல் பண்ணிங்கதானே.
இதுவும் வேணும் இன்னமும் வேணும் !

பூங்கோதை said...

ரொம்பப் படுத்தறேடா தம்பி... ஏன்டா ரகசியங்களை எல்லாம் இப்பிடி கலாய்க்கிறியே.. இது நியாயமா???
very nice

ம.தி.சுதா said...

கவிக்கிழவரே என்ன இது சோதனை... கவிதை மட்டும் அப்பழக்கில்லாத சொற் குவியல்... அருமை...

Anonymous said...

மோனி said...

இது என்னய்யா டைட்டில் ?
”பிட்” படம் மாதிரி ??

:-)
hahahahhahahhahahaha

vanathy said...

super!

சி.பி.செந்தில்குமார் said...

ஓப்பனா சொல்றேன்(டிரஸ் போட்டிருக்கேன்)உங்க கவிதையை விட லே அவுட் சூப்பர். பிளாக் டிசை அற்புதம் சார்.>>>>>


இது என்னய்யா டைட்டில் ?
”பிட்” படம் மாதிரி ??
>>>>

நானும் வழி மொழிகிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

லைலா ஃபோட்டோ போட்டதுக்கு உங்க ஆளு கோவிச்சுக்கலை?(அதுக்கு வேற ஒரு கவிதை எழுதி சமாதானப்படுத்தனுமா?)

suba said...

weliye sonna adu ragasiam illaiye.... anna
iruppinum ungal ragasiyangal unmaiyanada?????

Maheswaran.M said...

எதோ தலைப்பை பார்த்து பயந்துட்டன்
மிக அருமை நண்பரே