8/30/2010

புழுதியாய் போகும் மனிதன்


நிலையற்ற வாழ்கையில்
நிலையானதை தேடி
விலையற்ற அன்பை
விலை கொடுத்து வாங்கும்
மூலையற்ற மனிதன்

நிறம் பார்த்து பழகி

நிலை கண்டு பேசி
நிழலான வாழ்க்கையில்
நிஜமானதை இழக்கும்
நிம்மதியற்ற மனிதன்

புறம் பேசி வாழ்ந்து

மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி
நிரந்தரத்தை மறக்கும்
மந்தையான மனிதன்

பொருள் தேடி வாழ்தல்

பெரும் புகழ் என்று எண்ணி
நல் பொழுதுகளை இழந்து
புழுதியாய்
போகும்
புகழற்ற மனிதன்

8/26/2010

தமிழ் கைதியின் காதல் கவிதை


அன்று
வயல்களும் வரப்புகளும் ஊடறத்துசெல்லும் ஊரிலே
எனது எண்ணங்கள் அதையும் தாண்டிச்சென்று
என்னவளின் ஊரை மேய்ந்துவிட்டு வரும்

இன்று
முட்கம்பி வேலிகளும் காவலரன்களும்
முளைத்திருக்கும் முழத்துக்கு முழம்
என் எண்ணங்களும் முடங்கிவிடும்

காதலியும் இல்லை அவள் ஊருமில்லை
கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்
விடுதலை ஆகியும் பயனில்லை

சிறை கூட்டில் இருந்து சிறைக்குள் விடிவிப்பது
விடுதலையும் இல்லை

8/23/2010

காதலே கொடுமையின் வேட்டை
இரவுகளின் இருள் விளிம்பில்
கனவுகளின் கோட்டை


தனிஉருவம் விழித்திருந்து
தேடுது தன் வாழ்வை


காதலின் சந்தோசங்கள்
கற்பனையின் மூட்டை


காத்திருக்கும் நாட்களில்
காதலே கொடுமையின் வேட்டை

8/16/2010

காதல் மொழி


உருகிய நீர்த்துளிகள்
கண்களினதா

பேசிய வார்த்தைகள்
உதடுகளினதா

இதயத்தின் துடிப்பு
காதலினதா

காக்கவைத்த நான்
காதலனா

காத்திருந்த நீ
காதலியா

ஏக்கத்தின் நிமிடங்கள்தான்
காதலா

ஏங்கவைத்து பார்பதுதான்
ஊடலா

செல்லககன்னம் சிவப்பதுதான்
கோபமா

சிவந்த உதடு சிரிப்பதுதான்
கூடலா

நெஞ்சோடு தலை வைப்பது
கெஞ்சவா

அண்ணார்ந்து முகம் பார்ப்பது
கொஞ்சவா

தோளில் கை போடுவது
அணைக்கவா

தொடாமலே கண் பார்ப்பது
...........


8/12/2010

காதலே என் தெய்வம்காதோரம் பதில் சொல்ல
காற்று காற்றுக்கென்ன வெட்க்கம்


உன் காதலை அள்ளிவந்த
மூச்சுக்கென்ன தயக்கம்


கண்களில் தெரிந்திடும்
காதலின் ஸ்பரிசம்


என் எண்ணங்களில் எல்லாம்
உன்னை கொல்லைகொள்ளும் திட்டம்


முந்துவதை நினைக்கையில்
நெஞ்சு முழுக்க தயக்கம்


முந்திவிட்டேன் அன்பே
உன்காதலே என் தெய்வம்

8/11/2010

எம் இனமே அப்படிதான்

இருண்ட வாழ்வில்

இதிகாசம் தேடும்

இடம்பெயர் அகதிகள்

எம் இனமே அப்படிதான்


சொந்த இடத்தில்தான்

இருக்கிறோம்

சொத்து சுகத்துடந்தான்

இருக்கிறோம்


எம் சொந்த உணர்வைவிட்டு

உரிமயைவிட்டு உறவைவிட்டு

உண்மையைவிட்டு - நீண்டதூரம்

இடம்பெயர்ந்துவிட்டோம்எம் இனமே அப்படிதான்

8/10/2010

தாசியான தமிழினம்

கதறிய உள்ளங்களில்

கிளறிய வேதனைகள்

புகைந்து சாம்பலாகமுன்

முட்கம்பி வேலி வாழ்வானது


முடங்கிய உணர்வுகளில் - புது

உணர்ச்சிகள் வரமுன்னர்

சிதைந்தது எண்ணங்கள்

உயிர் கலைந்த சாவுகள்


உடலிருக்கு உயிர் இருக்கு

நரம்பிருக்கு எலும்பிருக்கு

உணர்வு தொலைத்த வெறும் கோதுகள்

இரத்தமில்ல உயிர் கோலங்கள்


கடலிருக்கு வயலிருக்கு

குளமிருக்கு நிலமிருக்கு

தொடமட்டும் முடியாத நாதாரிகள்

தொட்டாலும் கொன்றுவிடும் சூதாடிகள்


மூச்சுமட்டும் எடுக்கமுடியும்

முகம்கூட சுளிக்கமுடியா

முகம் இருக்கும் முழு முண்டங்கள்

மனம் முழுக்க இரத்த வாடைகள்


என் நிலமிருக்கு தொழிலிருக்கு

சுய கௌரவம் நிறைய உண்டு

பொத்திட்டு இருடா பரதேசி

நான் உன்னை ஆளும் இனவாசி


நான் பொருள் தருவேன்

பொதி தருவேன்

பொத்திட்டு வாங்கடா

என் ஆட்சியில் நீ தாசி

8/09/2010

காதலால் உருகி கண்ணீர் மல்கிவிழிகளின் கதிர்களில் ஏக்கம்

விரும்பியே துடிக்குது இதயம்

உதடுகள் உரசிடும் பருவம் - மனம்

காதலால் குளைந்த அருவம்


பார்கமுன் முடிக்கவா வெட்கத்தை

முடித்தபின் பார்கவா மிச்சத்தை

நினைக்கமுன் ஏங்குது கனவுகள்

நினைக்கவே மயக்குது வனப்புகள்


தடுப்பது மனம்தான் மறந்துவிடு

தற்பொழுது காதலை பெற்றுவிடு

கண்ணை மூடினால் உலகம் இருட்டு

காதலில் விழுந்தபின் கண்கள் குருடு

8/02/2010

காதலாகொஞ்சி கொஞ்சியே

குலையவைக்கும்

உன் காதல்

நெஞ்சதூடு இதயம் தேடும்

உன் கண்கள்

மிச்சமின்றி

சுவாசித்து முடிக்கும்

உன் மூக்கு

சத்தமின்றி சல்லடைபோடும்

உன் சிரிப்பு

வெட்கமின்றி சொல்லுகிறேன்

காதலா

எனை வென்றுவிட்டு போவதே

என் வாழ்வடா