
நான் உரைக்க போவதெல்லாம்
நாவிலுள்ள உண்மைகளே
நலிவுற்று இருந்தாலும்
தளராத உறுதியுடன்
மெலிவுற்று இருந்தாலும்
கலங்காத கண்களுடன்
ஒரு சேலை தலைபெடுத்து
உடல்முழுக்க சுத்திவிட்டு
மானத்துடன் நிமிர்கின்ற
மறத்தமிழ் பெண்மணி
ஊர் விட்டு ஓடிவந்து
உற்றவரை நான் இழந்து
கைக்குழந்தை கதறலுடன்
கை ஏந்தி நிற்கின்றேன்
ஒருமுறை பசி போக்க
ஒன்பது இடம் ஏறிவிட்டேன்
ஒவ்வொரு இடமும் புதுசெனக்கு
ஒவ்வொரு கதையும் பழசெனக்கு
பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது
நாவிலுள்ள உண்மைகளே
நலிவுற்று இருந்தாலும்
தளராத உறுதியுடன்
மெலிவுற்று இருந்தாலும்
கலங்காத கண்களுடன்
ஒரு சேலை தலைபெடுத்து
உடல்முழுக்க சுத்திவிட்டு
மானத்துடன் நிமிர்கின்ற
மறத்தமிழ் பெண்மணி
ஊர் விட்டு ஓடிவந்து
உற்றவரை நான் இழந்து
கைக்குழந்தை கதறலுடன்
கை ஏந்தி நிற்கின்றேன்
ஒருமுறை பசி போக்க
ஒன்பது இடம் ஏறிவிட்டேன்
ஒவ்வொரு இடமும் புதுசெனக்கு
ஒவ்வொரு கதையும் பழசெனக்கு
பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது
கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .
Tweet | |||||
25 comments:
உணர்ச்சிகளை தூண்டுகிறது... :(
Nalla ungarchi miguntha kavithai nanbaa.........
நல்ல வரிகள் நண்பரே!!!
arumaya irukku thozha !
நல்லா இருக்கு.......வாழ்த்துக்கள்
காமக் கண்களுக்கு வியாபிக்க இடம் தெரிவதில்லை..மனித உருவில் வாழும் மிருகங்கள்
ம்ம்...காமக் கொடூரர்கள்
Good one.
ஒரு சேலை தலைபெடுத்து
உடல்முழுக்க சுத்திவிட்டு
மானத்துடன் நிமிர்கின்ற
மறத்தமிழ் பெண்மணி
I like this verse. Its true.
நல்ல வரிகள்
பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது\\\\\\
உணர்ச்சிகரமான வரிகள்... பாராட்டுக்கள் நண்பரே...
சார்....
எங்கியோ போய்டீங்க சார்...
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
//பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது//
நகரத்தில் வாழும் நாகரீகமான மிருகங்கள்
மனதை தொட்டவரிகள்:)
அருமையான கவிதை. உணர்வை தூண்டுகிறது!
வலிக்கிறது கவிதை
விஜய்
தவறான ஒரு பார்வையை நொடியில் உணர்ந்து கொள்ளும் பெண் மனம். யதார்த்தம் சுடுகின்றது.
நெஞ்சை சுடும் நிஜம்.
கவிதை சொல்லும் உணர்வுகள் அற்புதம்!!!
யதார்த்தமான வரிகள் .. காயப்படும் பெண்ணின் உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கிறது ..அருமை
..கொஞ்சமாவது வெட்கம் கொள்வோம்
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
very nice & touching.
அருமை....அட்டகாசம்
/////ஒருமுறை பசி போக்க
ஒன்பது இடம் ஏறிவிட்டேன்////
அண்ணா அருமை அத்தனையும் உண்மை வரிகள்....
Oru nimidam,
Nenjaththai Nilaikulaiththathu
En viligalile,
Neerai varavalaiththau
Varumain Vethanaiyai,
Un Kavithai Varigal Solliyathada,
Viligalin Neer Enkannangalai Thaluvida
Post a Comment