2/14/2011

கோடித்தவிப்பை மூடிவைத்து


தேடி வந்த காதலும்
தேடிச்சென்ற காதலும்
மோதிக்கொண்ட இடமெது
மோத வைத்த மனமெது

கோடித்தவிப்பை மூடிவைத்து
கோடு போட்டு வாழ்ந்திருந்து
நாடிச்சென்ற நேரமெது
தாவிச்சென்ற இதயமெது

சோடி போட்டு வாழ்வதற்கு
சோடி சேர காத்திருந்து
செய்தி சொன்ன வார்த்தை எது
செய்தி வந்த உதடு எது

கூவிக் கூவி விற்பதற்கு
குவித்து வைக்கும் பொருளுமல்ல
தானாக வந்ததிது
தவிற்பவற்கே சொந்தமிது

2/07/2011

நிலைத்தலுகான போராட்டம் தொடரட்டும்


விடியல் புலர்வது விடிவுக்கல்ல
இருட்டினில் விடிவி கிடைப்பது இல்லை
மறைந்தது இன்று சூரியனானாலும்
உதிப்பது நாளை சுட்டெரிக்கட்டும்

மறைவெல்லாம் மறைந்த்தவை அல்ல
மறைந்த்ததும் வாழ்வு இருல்வதில்லை
நினைவுகள் எல்லாம் கொடுமை அனாலும்
கனவுகள் என்றும் நிமிர்ந்திருக்கட்டும்

உயர்வுகள் எல்லாம் உயரமான்தல்ல
வீழ்ச்சிகள் இன்றி உயர்ந்தவர் இல்லை
நினைப்பது இங்கு நடக்காவிடினும்
நிலைத்தலுகான போராட்டம் தொடரட்டும்