8/10/2010

தாசியான தமிழினம்

கதறிய உள்ளங்களில்

கிளறிய வேதனைகள்

புகைந்து சாம்பலாகமுன்

முட்கம்பி வேலி வாழ்வானது


முடங்கிய உணர்வுகளில் - புது

உணர்ச்சிகள் வரமுன்னர்

சிதைந்தது எண்ணங்கள்

உயிர் கலைந்த சாவுகள்


உடலிருக்கு உயிர் இருக்கு

நரம்பிருக்கு எலும்பிருக்கு

உணர்வு தொலைத்த வெறும் கோதுகள்

இரத்தமில்ல உயிர் கோலங்கள்


கடலிருக்கு வயலிருக்கு

குளமிருக்கு நிலமிருக்கு

தொடமட்டும் முடியாத நாதாரிகள்

தொட்டாலும் கொன்றுவிடும் சூதாடிகள்


மூச்சுமட்டும் எடுக்கமுடியும்

முகம்கூட சுளிக்கமுடியா

முகம் இருக்கும் முழு முண்டங்கள்

மனம் முழுக்க இரத்த வாடைகள்


என் நிலமிருக்கு தொழிலிருக்கு

சுய கௌரவம் நிறைய உண்டு

பொத்திட்டு இருடா பரதேசி

நான் உன்னை ஆளும் இனவாசி


நான் பொருள் தருவேன்

பொதி தருவேன்

பொத்திட்டு வாங்கடா

என் ஆட்சியில் நீ தாசி

2 comments:

குமரன் said...

கவிதை அருமை
உருக உருக காதல் கவிதையும் எழுதுகிறீர்கள்
நெஞ்சு கலங்க தேச கவிதைகளும் எழுதுகிறீர்கள்
தமிழினத்தின் நிலையை எழுதியதற்கு நன்றிகள்

sakthi said...

யாதவன் நெற்றியடியாய் ஒரு கவிதை

நன்று!!!