12/06/2010

சுழன்றிடும் உலகில் உயிர் பெற்றிடும் நாடு


Align Center
நடை பிணமானோம்
நாட்டினை இழந்தோம்
வெட்கமின்றியே
மூச்சினை விடுறோம்

சுதந்திரம் இல்லை
சொந்தமண் எங்கே
சிறையினில் வாழும்
வாழ்வில் பயனில்லை

உயிர்களை இழந்தோம்
உடைமைகள் தொலைத்தோம்
உண்மையை சொன்னால்
சாக சடம் ஆனோம்

மற்றவர் கையை
நம்பியே கெட்டோம்
மானத்தை தொலைத்த
மனிதர்கள் ஆனோம்

இலச்சிய தாகம்
சூழ்ச்சியால் சாவு
சுழன்றிடும் உலகில்
உயிர் பெற்றிடும் நாடு

11 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

.

யாதவன் said...

. இது என்னது சுதா

sakthi said...

உங்கள் வேதனை புரிகிறது யாதவா....

வினோ said...

இவை மறையும். கனவு மெய்ப்பட வேண்டும்...ஒரு நாள்...

vanathy said...

மனதை தொடும் வரிகள்.

பிரஷா said...

"வெட்கமின்றியே
மூச்சினை விடுறோம்"
கவிதை அருமை... நண்பா

ஹேமா said...

யாதவன்...மனதில் சோர்வு வேண்டாம்.நம்புவோம்.வாழ்வோம்.நல்லதே நடக்கும் எம் தலைமுறைக்காவது !

ஏன் என் பக்கத்தில் மாவீரர்தின நேரத்தில்கூடக் காணோம் ?

தமிழரசி said...

விலகா வலி வெல்ல துடிக்கும் வேதனை தெரிகிறது வரிகளில் யாதவன்

முல்லை அமுதன் said...

nallai kavithai.
paaraaddukal.
mullaiamuthan

ம.தி.சுதா said...

எங்கையா போயிட்டிங்க.. புதுவருட வாழ்த்துக்கள்....