7/31/2009

இக்கணை யாரதோ

7/19/2009

ஏக்கத்தின் எல்லைதிரும்பிப்பார்த்தேன்

சரிகை சருசருக்கநடக்கிறார்கள்

எத்தனை வீடுகள் ஏறிஇறங்கியிருப்பர்

என் அகராதியில் எழுதப்பட்டுவிட்டது

எனக்கு ஏமாற்றம்தானென்று

இருந்தும் ஒரு நப்பாசை

என்னையும் பிடிக்குமென்று

என் உழைப்பில்தான்

எங்கள் குடும்பம்

ஒவ்வொறுமுறையும்

தட்டங்கள் நிரப்பவே

சேமித்தபணம் செலவளிந்துவிடும்

சிரித்தமுக்துடன்

வாசல்படிஏறிவந்து

கதைத்துப்பேசி

பலகாரங்களைத்தின்றுவிட்டு

பசுமையான எங்கள் குடும்பம்போன்ற

வெற்றிலையை கையிலெடுத்து

என்வாழ்க்கை போன்ற

காய்ந்த பாக்கை அதற்குள் போட்டு

வெள்ளைமனசு சுண்ணாம்பை

மெதுவாகத்தடவி

ஒரேசுருட்டுசுருட்டி

வாய்க்குள்போட்டு அரைத்துவிட்டு

போகுமபோது வாசலில் துப்பிவிடுவர் சிவப்பாய்

என் வாழ்க்கையையும் சேர்த்து.

7/15/2009

ஊரைப்பிரிந்து

பிணங்களும்
பிணவாடைகளும்
கழுகளின் காரியாலயங்களும்
வட்டில்லா தென்னைகளும்
பற்றைமண்டிய வீடுகளும்
கோபுரம் இடிந்தகோயில்களும்
பள்ளம் விழுந்த வீதிகளும்
இது எந்தன் கிராமமா
இல்லை செவ்வாய்க்கிரகமா
ஊரைச்சுற்றி சோலைகள்
கைகூப்பவைக்கும்
மணிஓசைகள்
விளைச்சல் தரும் வயல்கள்
பாலரிவிபோல் கால்நடைகள்
ஆங்காங்கே அழகிய கூரைவீடுகள்
குளைதள்ளும் வாழைகள்
பனைதரும் நொங்குகள்
பாட்டி சொல்லும் கதைகள்
இதுதான் என் கிராமம்
எப்போ செல்வோம்
எங்கள் இறுதிமூச்சைவிட