10/03/2010

காதலால் ஆதலால் கண்

10 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கண்களுக்குள் தூசு போகாமல்

18 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உனை பார்க்கும் கண்களுக்குள்
தூசு போகாமல்

28 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உன் கண்களுக்குள் தூசு போகாமல்

38 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
எம் செல்லகண்ணின்
கண்களுக்குள் தூசு போகாமல்

78 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கடைசிவரை வருபவளை
கண் கொண்டு பார்பதற்கு


25 comments:

அன்பரசன் said...

பிரமாதம்.
வயது வாரியாக எடுத்துரைத்தமை அருமை.

வினோ said...

அருமை நண்பா... என்ன அதுக்குள்ள 78 போய்டீங்க...

ஹேமா said...

என்ன யாதவன்...(எந்திரன்)ரஜனி பட அதிர்வோ.எட்டு எட்டா வாழ்வைப் பிரிச்சமாதிரி.கவிதை அருமையா வந்திருக்கு.

நிலாமதி said...

கவிதை அருமை .. வயது வாரியாக் எடுத்து காட்டியமை. பாராடுக்கள்

பழமைபேசி said...

அருமைங்க.... இப்பதான் உங்களுக்கு 78ங்ளா??

தமிழரசி said...

பருவங்கள் தொட்டு பாதுகாத்த பார்வையின் பார்வை அழகு யாதவன்..

ஜெரி ஈசானந்தன். said...

superb....

யாதவன் said...

அன்பரசன் sவினோ ஹேமா நிலாமதி பழமைபேசி தமிழரசி நன்றி என் நட்பு வட்டங்களே

மைந்தன் சிவா said...

அவ்வளவு கவனம்..பாசம்..காதல்...ம்ம்ம் வாழ்க வளமுடன் யாது

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமையான பாகுபாடு நண்பா..

முனைவர்.இரா.குணசீலன் said...

மூச்சு இழுக்க மூக்கிருந்தும் காற்று வாங்க உரிமை இளந்த இனம்

நண்பா சிறு திருத்தம்..

இழந்த இனம்.

Kousalya said...

அசத்தல்.

முனைவர்.இரா.குணசீலன் said...

வலையாக்கம் அருமையாக உள்ளது நண்பா

Lakshman said...

எல்லாம் காதல் படுத்தும் பாடு???.. என்ன செய்ய?

யாதவன் said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன் திருத்திவிட்டேன் நண்பரே

நேசமுடன் ஹாசிம் said...

வித்தியாசமான கற்பனை தோழா நீங்கள் எந்த வகுப்பில்

கே.ஆர்.பி.செந்தில் said...

எந்த வயாதாகினும் மாறாதது காதல் மட்டுமே ...

சௌந்தர் said...

காதல் என்னவெல்லாம் செய்யுது

rk guru said...

நல்ல கவிதைகள் வாழ்த்துகள்

Jeyamaran said...

Very nice.............

வெறும்பய said...

அருமைங்க...

ம.தி.சுதா said...

அடடா வயது ஏற ஏற இம்புட்டு வில்லங்கம் வருமா..??? ஆனால் கவிதை அரமையிலும் அருமை...

ம.தி.சுதா said...

அண்ணா இன்று தான் கவனித்தேன் எனது வலைப் பூவையும் தங்கள் மாலையில் செருகியமை.. மிக்க நன்றி அண்ணா..!!!!

suba said...

very nice anna,
ungal ennangal innum pala
viththiyasamana kavigalai uruvakkum.

suba said...

kaatrilum naan
kavanamaga pogiren,
en kangalukku urimai ullaval
ennaivida neethan ennru!