2/26/2012

மானத்தையும் வெக்கத்தையும் விட்டு

இழந்தவை
திருப்பி பெறமுடியாதவை
மறந்திடவும் முடியாதவை

ஒரு கட்டம் வரை
அழமுடியும்
ஆழமாக உணர்ந்து
அழமுடியாது

மனிதனாக
வாழ முடியவில்லை
மனிதனாக
வாழ நினைத்தால்
மிருகத்தைவிட
கேவலமான முடிவு

தண்ணீரை
மறித்துகட்ட முடியும்
உணர்ச்சிகளை
கட்டாயம்
கட்டுப்படுத்த வேண்டி உள்ளது

ஒரு நூல்
இடைவெளியில்
உயிர் எடை குறைய
வாய்ப்புகள் பல

காலடித்தடம் தெரியாமல்
வாழ வேண்டும்
மானத்தையும்
வெட்கத்தையும் விட்டு

2/19/2012

நீயே என் காதலின் அழகிய தேவதை


காற்று வெளியில் பூக்கள் மிதக்கும்
காதல் சொல்ல கண்கள் துடிக்கும்
மெல்லிசை மெல்ல காதினில் கேட்க்கும்
மேகமாய் கூந்தல் முகத்தினில் பறக்கும்

வண்டுகள் அங்கே கூட்டமாய் மொய்க்கும்
வண்ணத்து பூச்சி வட்டமிட்டு துடிக்கும்
இதழ்களை விரித்த அழகிய மலரோ
இளமையை தெளித்தி நிமிர்ந்து நிற்கும்

காற்றுக்கு கொஞ்சும் மலரின் வாசனை
கண்களை மயக்கும் அழகின் போதனை
இதழ்களில் படர்ந்த மென்மையின் சோலை - என்னை
கெஞ்சிட செய்யும் உதடுகளின் வேலை

இன்று உணர்ந்தேன் மனதினில் தோல்வியை
ஒரு நொடி உந்தன் பார்வையின் வேதனை
நெஞ்சினில் கை வைத்து அடிச்சு சொல்கிறேன்
நீயே என் காதலின் அழகிய தேவதை

2/04/2012

உடலுக்குள் அசுத்தமா உலகமே அசுத்தமா


மூச்சு காற்று
உடல் பரவி திரும்பும்
அசுத்த காற்று

உடலுக்குள் அசுத்தமா
உலகமே அசுத்தமா

அசுத்த உலகில்
சுத்த காற்றை
மூக்கு துவாரம்
வடிகட்டும்

மனித உடம்பில்
சுத்த காற்று
அசுத்தங்களை
வெளித்தள்ளும்

உடலுக்குள் அசுத்தமா
உலகமே அசுத்தமா

அசுத்த ஆட்சிகள்
சுத்தத்தை அசுத்தமாகி
வெளுத்து கட்டும்

சுத்தங்கள்
சுத்தமாக வாழமுடியாமல்
அசுத்ததுக்குள்
சுத்தம் தேடும்

சுத்தங்களின் சுவையை விட
அசுதங்களின் சுவை அதிகம்
அதிகாரம் கையில் இருந்தால்
அசுத்தங்களெல்லாம் சுத்தம்

சுத்தமான கீழ்தட்டு
அசுத்தமாக வாழ்வதும்
அசுத்தமான மேல்த்தட்டு
சுத்தமாக வாழ்வதும்

மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்தும்