12/31/2016

விழுதாகி

விழுதாகி 
விடியலுக்காய் காத்திருக்கிறோம் 
விடிந்ததும் 
புதுவருடம் கொண்டாட

10/16/2016

அவன் அன்று இறைவன்

கண்ணை மூடும் கறுப்பு வானம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று
*********
அடங்கிப்போகும் அவசர உலகம்
ஓய்வு எடுக்கும் இடைவெளி நேரம்
குடும்பம் கூடும் நிலவு முற்றம்
ஊரை கெடுக்கும் குடிகாரன் சத்தம்
************
குறைகளை சொல்லும் மனைவியின் நேரம்
தேவையை கேட்கும் பிள்ளையின் சிணுங்கல்
கணக்கு பார்க்கும் அப்பனின் மூளை
போர்வைக்குள் அடங்கும் இயலாமை யுத்தம்
*************
தலையணை மந்திரம் சொல்லிடும் இரவு
தரணியை ஆள போட்டிடும் கணக்கு
கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு
***************
வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்
புலம் பெயர்ந்தாலும் மனம் மாறாது
திறந்து கிடக்கும் யன்னல் வழியே
பறந்து கிடக்கும் வானம் கண்டேன்
மனதில் தோன்றும் எண்ணம் எல்லாம்
நினைந்து நினைத்து கண்ணீர் விட்டேன்

நாலுபக்கம் வேலி கட்டி
நடுவில் ஒரு வீடு கட்டி
படலைக்கு கூட பட்லொcக் போட்டு
பாதுகாப்பாய் இருந்த குடும்பம்

உயிரை பாதுகாக்க வேண்டுமென்று
நாலு திசையும் ஓடி ஒளிந்து
திக்குக்கு ஒருவராய் சிதறிவிட்டோம்
பெற்றவர்களை மட்டும் விட்டிவிட்டோம்

வயது வந்த நேரத்திலும்
வைரம் பாய்ந்த மனசுடனே
சொந்த வளவில் சோறு ஆக்கி
தின்று மகிழும் அம்மா அங்கே

ஐந்துவருசத்துக்கு ஒரு முறையேனும்
பேரப்பிள்ளைகளை கூட்டிக்கொண்டு
அம்மா அப்பாக்கு காட்டி விட்டு
வந்த கடனை அடைப்பதற்கு
திரும்பி ஓடி வந்துவிடுவோம்


சொந்த மண்ணில் போய் நின்று
சொந்தத பந்தங்களோடு விருந்துண்ட்டு
கோயில் குளம் போய்வந்து
சந்தோசமாய் இருந்ததை நினைத்தே 
இரவு பகல் உழைக்க தொடங்குவோம்
அடுத்த ஐந்துவருடம் வரும் வரைக்கும்

10/15/2016

கூசுதடா


கண்களால் பாரக்கும்போதே
கூசுதடா
கைகளால் தொடும்போதே- உயிர்
போகுதடா
பெண்ணின் வெட்கம் தெரிந்த
மன்னவா
என்னை முழுசாய் எடுத்துக்கொண்டு
போடா

வெக்கங்கள்


எனக்குத்ததெரியாத 
வெக்கங்கள் எல்லாம்
சொல்லித்தந்தது யார்

எனக்கே தெரியாமல் 
என் வெக்கங்களை
தொட்டுப்பார்ப்பது ஏன்


எனக்கே தெரியாமல்
என்வெக்கங்கள் எல்லாம்-உன்னிடம்
வெக்கப்படுவது எப்படி

காப்பாற்ற வாராயோ


மழையிலும் நனையவில்லை
வெய்யிலில் உருகவும் இல்லை
குடை கூட தேவையில்லை
என்றிருந்தேன் ....

கரும்பாறையைவிட
உறுதியாய் கிடந்தேன்

கரும்பைவிட
இனிமையாந் இருந்தேன்

உன்னை கண்டதும்
நடுங்கி வியர்து
நனைந்துவிட்டேன்

என் இதயத்ததை
பிடுங்கி முழுதாய்
முழுங்கிவிட்டாய்

ஆடைகளைந்தது போல்
என் இதயம் பறித்துவிட்டாய்
வெட்கங்கள் கொள்கிறதே
என்னை இறுக்கி அணைத்து
காப்பாற்ற வாராயோ .....இறுதியாக தந்த முத்தம்

இறுதியாக தந்த முத்தம்
இன்னும் ஈரம் மாறாமல்
என் கன்னங்களில்
ஊற்றெடுக்கிறது

துயிலும் அறையில் - உன்
ஒற்றைத்தலையணையை
கட்டி அணைத்தே
காலம் கழிக்கிறேன்

நீ விட்டு போன
சுவாசக்காற்றுகள் -என்னை
சுற்றி சுற்றி வந்தே
நினைவை தூண்டுகின்றது

ஒரு முறையேனும்
உன் அழைப்புவராதா என
காத்து கிடந்தே என்
தொலைபேசி செத்துவிட்டது

விட்டு சென்ற
எச்சங்களை அளித்துவிட்டு போ
இல்லை என்னை வந்து
அள்ளிக்கொண்டு போ


என்னோடு நான் பேசும்
கொடூரத்தை மட்டும்
தந்துவிடாதே
நான் செத்துவிட மாட்டேன்

வெட்கத்திரையை கிழித்தவனே

பெண்-
பெண்மையின் வெட்கத்திரையை கிழித்தவனே
வெட்கமின்றி என்னை கட்டி அணைத்தவனே
விரல் நிகம் கீறி அடையாளம் தந்தவனே
என் உயிர்மீது உனைத்தந்து வளர்த்தவனே.

ஆண்-
திமிர்பொங்கும் அழகோடு நின்றவளே
என் திறமையைக்காட்ட வழிசமைத்தவளே
தலையணையோடு தவழ்ந்து திரிந்தவளே
எனை தவறாமல் அணைக்கும்
மந்திரியே.

பெண்-
உயிரோடு உயிர் சேரும் நேரமெல்லாம்
உனை உறவாக நினைத்து மகிழந்தேனே
இனி வாழ்வில் எல்லாம் நீதான் என்று 
என் இதயத்தை பரிசாக தந்தேனே.

ஆண்-
கனவோடு நான் வாழ்ந்த வாழ்க்கையினை
நியமாக்க நேராக வந்தவளே 
உனை என்னோடு எனக்குள்ளே வைத்திருந்து
என் கண்ணாக உனை காப்பேனே.சொல்லிவிட்டுப் போ


யன்னல் கம்பிகளின் இடுக்கினிலே
சிக்கித்தவிக்கும் என் இரவு நிலவு

கண்கள் இரண்டும் குளமாகி
அரிவி கொட்டும் என் கண்கள்

சொல்லிய வார்த்தைகளெல்லாம்-உன் 
உள்ளத்தில் இருந்து வந்ததா

நான் உனக்காக வளரவில்லை - என்னை
உனக்காகவும் வளர்க்கவில்லை

உனக்கான துணையாக மாற்றினாய்
அதற்காகவே என்னை நான் மாற்றினேன்

எதற்காக வெறுத்தாய் காரணமின்றி
ஒரு முறை சொல்லிவிடு போகிறேன்

இந்த நிலவும் வேண்டாம்
கரு இரவும் வேண்டாம்

தனிமையில் ஓரு மூலையில்
என்னை நானே காதல் செய்வேன்

எதற்காக வெறுத்தாய் 
சொல்லிவிட்டுப் போ

மனம்விட்டு பேச

மனம்விட்டு பேச
மனதுக்குள் ஒருவன்
தினம் என்னை பார்த்து
சிரித்தாலே போதும்
கண்கள் மட்டும் பேச
மனதை கொஞ்சம் திறக்க
மௌனம் மெல்ல உடைக்க - என்
மனதை புரிந்துகொள்ள
மனதுக்குள் ஒருவன் வேண்டும்
மனதோடு மட்டும் வேண்டும்
மனம்விட்டு தினம் பேசி
மனம் ஆற ஒருவன் வேண்டும்
காதலனாக வேண்டாம்
கணவனாக வேண்டாம்
நண்பனாக கூட வேண்டாம்
நல்ல உள்ளமாக வேண்டும்
பேசினாலே போதும்
பஞ்சு காற்றிலே
பறப்பது போல் உணர்வேன்
நேசித்தலே போதும்
நெஞ்சம் ஆறுதலானதாய்
உணர்வேன்
வேஷங்கள் இல்லாமல்
தினம் பாசங்கள் கொண்டு
ஸ்பரிசங்கள் இல்லாமல்
மனம் தொட வேண்டும்
மனம்விட்டு பேச
மனதுக்குள் ஒருவன்
மனம்விட்டு போகா

மனதோடு ஒருவன்