7/28/2012

பிரியாமல் வாழுகின்ற சுகம்

கடலில் விழும் சூரியன்

நெருப்பாய் சிவக்கும் வானம்

ஓங்கி அடிக்கும் அலைகள்

ஓயாமல் துடிக்கும் இதயம்


நாட்களை என்னும் மனசு

நடந்ததை நினைக்கும் வயசு

ஒருமுறை பார்த்து துடிக்க

இரு விழி போடும் கணக்கு


இருளில் எழும்பும் நிலவு

கனவில் தவழும் நினைவு

இடைவெளி என்பது பெரிது

இரு மனம் துடிக்குது சேர்ந்து


வரும்வரை காத்திருக்கும் கண்கள்

வரமுன்னே சிரித்துவிடும் உதடு

தலையணையை அணைத்திடும் கைகள்

காற்றுக்கு கொடுக்கும் பல முத்தம்


காணாமல் கனக்கும் இதயம்

காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்

கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்

பிரியாமல் வாழுகின்ற சுகம்

7/15/2012

கரையில் காத்து நிற்பதோ


வானம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ

பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ

கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ7/12/2012

காதல் என்னை கொன்றிடும்

பூக்களில் மகரந்தம் – உன்

புண்ணகையில் சிறு காந்தம்

வண்டுகள் மொய்திடும் -உன்

வார்த்தைகள் தின்றிடும்


புற்களில் பனித்துளி – உன்

கண்களில் சிறு ஒளி

வெப்பத்தில் உருகிடும் – உன்

வெட்கம் உயிர் தொடும்


குருவிகள் கீச்சிடும் – உன்

குரல்களில் இசைவரும்

மரக்கிளை அசைந்திடும் – உன்

மனசிலே மழை வரும்


சூரியன் கண் முழிக்கும் – உன்

நெஞ்சிலே பெண் சிரிக்கும்

காலை அது விடிந்திடும் – உன்

காதல் என்னை கொன்றிடும்