8/30/2010

புழுதியாய் போகும் மனிதன்


நிலையற்ற வாழ்கையில்
நிலையானதை தேடி
விலையற்ற அன்பை
விலை கொடுத்து வாங்கும்
மூலையற்ற மனிதன்

நிறம் பார்த்து பழகி

நிலை கண்டு பேசி
நிழலான வாழ்க்கையில்
நிஜமானதை இழக்கும்
நிம்மதியற்ற மனிதன்

புறம் பேசி வாழ்ந்து

மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி
நிரந்தரத்தை மறக்கும்
மந்தையான மனிதன்

பொருள் தேடி வாழ்தல்

பெரும் புகழ் என்று எண்ணி
நல் பொழுதுகளை இழந்து
புழுதியாய்
போகும்
புகழற்ற மனிதன்

9 comments:

Mohamed Faaique said...

//நிறம் பார்த்து பழகி
நிலை கண்டு பேசி//
NICE...

கவி அழகன் said...

Mohamed Faaique நன்றி உங்கள் காதிதிரமான கருத்துக்கு
உங்கள் கருத்ஹுகள் என்னை இன்னும் புடம்போடும்

ம.தி.சுதா said...

//..புறம் பேசி வாழ்ந்து
மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி..//
உண்மையான வரிகள் அண்ணா...

கவி அழகன் said...

ம.தி.சுதா நன்றி உங்கள் காதிதிரமான கருத்துக்கு

வினோ said...

/ புறம் பேசி வாழ்ந்து
மற்றவர் குறை கண்டு மகிழ்தல்
தரம் என்று எண்ணி
நிரந்தரத்தை மறக்கும்
மந்தையான மனிதன் /

உண்மை நண்பா.. கவிதை அருமை..

கவி அழகன் said...

வினோ நன்றி உங்கள் கருத்துக்கு

Anonymous said...

nice with contemporary life structure.by tharshan

Lakshman said...

நிறம் பார்த்து பழகி,நிலை கண்டு பேசி
நிழலான வாழ்க்கையில் நிஜமானதை இழக்கும்
நிம்மதியற்ற மனிதன். Anna,I like this.

suba said...

""பொருள் தேடி வாழ்தல்
பெரும் புகழ் என்று எண்ணி
நல் பொழுதுகளை இழந்து
புழுதியாய் போகும்
புகழற்ற மனிதன்""
Indraya Ulagail Saththiyamana Unmai Idu