12/16/2012

காதல் கள்வனுக்கு தண்டனை


அறியாத வயதில்தான் 
இதயம் 
தவறி விழுந்திருக்க வேண்டும் 
தவறி விழுந்தாளும் 
சரியான இடத்தில் விழுந்ததுக்கு 
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் 

தானாக தவறி விழுந்ததா 
நானாக தவற விட்டேனா, என்பதில்
இன்னும் சந்தேகம் எனக்கு 

எதுவாக இருந்தாலும் 
நான் என் கட்டுப்பாட்டில் 
இருந்ததாகவே 
நினைத்துக்கொண்டிருக்கிறேன் 
என் கள்வன் 
என் இதையத்தை
களவெடுத்தது தெரியாமலே 

இருந்தும் களவுபோனதை 
காட்டிகொள்ளாமலே  காதலிக்கிறேன் 

அவனை என் பின்னால் 
அலைய விட்டு பார்ப்பதில் 
அலாதி பிரியம் 

கள்வனுக்கு இதுவே 
தண்டனை 

11/28/2012

கார்த்திகை தெய்வங்களுக்கு ஒரு கவிதை


கார்த்திகை என்றதும் கண்களில் ஈரம்
மாவீர சொந்தங்களின் கல்லறை ஓரம்
களத்திலே காட்டிய வீரங்கள் எத்தனை – எம்
கண்மணிகள் தூங்கிடும் கல்லறைகள் அத்தனை

தீபங்கள் ஏற்றி பூசைகள் செய்வோம் – எம்
தேசத்தின் புயல்களை நெஞ்சிலே வைப்போம்
கார்திகை நாயகர்களின் கண்களில் எல்லாம்
ஈழத்தின் விடுதலை இலட்சியம் காண்போம்

தலைவனின் வழியில் காளத்திலே நின்று
கனவினை முடிக்கும் தைரியம்கொண்டு
புயலென பாய்ந்து போரினைசெய்தீர்
நெஞ்சிலே பாய்ந்த குண்டினால் மடிந்தீர்   

ஒருமுறை உங்களுடன் பேசிடவேண்டும்
மறுபடி கண்களை திறந்திட வேண்டும்
ஒரு பிடி சோற்றை உண்டிட வேண்டும்
என் விரல்களை சூப்பியே கைகளிவிட வேண்டும்

தெய்வங்களே

ஒருமுறை உங்களுடன் பேசிடவேண்டும்
மறுபடி கண்களை திறந்திட வேண்டும்
ஒரு பிடி சோறை உண்டிட வேண்டும்
என் விரல்களை சூப்பியே கைகளிவிட வேண்டும்

11/17/2012

வாராயோ மழையே நான் நனையஅப்பனும் ஆத்தாளும் நினைத்ததில்லை
தாங்கள் பெத்து போட்டது எனக்கேண்டு
அம்மணமாய் அலையும் போதும் தெரியவில்லை
நான் தான் உனக்கு அவனெண்டு

பள்ளியிலும் உன்னை பார்க்கவில்லை
பழகி பேச நீ பக்கத்தில் இல்லை
எனக்கெண்டே உன்னை அலங்கரிக்கவில்லை -  இருந்தும்
வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை

முழு நிலவுக்குள் ஒரு பிறை நுதல்
பிறைகளின் கீழ் இரு நட்சத்திரம்
நட்சத்திர தோட்டத்தில் ரோஜா இதழ்
நாணத்தில் கவுளும் கன்ன மடல்

வளைந்திட்ட நதியாய் உடல் நெளிய
நொடிகின்ற அளவில் இடை தெரிய
கலைந்திட்ட முகிலாய் முடி தழுவ
வாராயோ மழையே நான் நனைய

10/25/2012

மௌனத்தின் பிரியன்

ஒத்திகை பார்த்த                                                                        
ஓராயிரம் விடயங்கள்                                                                     
ஒற்றைக்குரலில் மௌனிக்க ,                                            
மௌனமானேன் 
நீ                                                                                                              
என் மௌனத்தின் பிரியன் என்பதால்


   

10/24/2012

வெட்கம் தொலைத்தேன்


வெட்கம் 

தொலைத்தேன் 

உன்னாலே

என்னை 

தொலைத்தேன்


உன்னுள்ளே

9/26/2012

லண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை நேரம்
வியாழன் கவி நேரம் 13-09-12


9/14/2012

கடவுளுக்கே அன்னையேசொற்ப காசில்

சோறு திங்கும்

அற்ப வேலையாம்

குப்பை அள்ளுதலை

நித்தம் செய்யினும்

நெஞ்சை நிமித்திடும்

வீரப் பெண் இவள்

உயிரை மதிப்பவள்


உடம்பின் உள்ளே

இதயம் இருக்கும்

இதயத் துடிப்பில்

மனிதம் பிறக்கும்

எச்சங்களை

துச்சம் என

குப்பைக்குள்ளே

கொட்டினாலும்


கண்களிலே

கருணை சேர்த்து

நெஞ்சினிலே

தாய்மை வழிந்து

தன் கைகளாலே

அணைத்தெடுத்து

அம்மாவாகிய

பெண்மையே


நீ

கடவுளுக்கே

அன்னையே

நான் வணங்கிறேன்

உன்னையே

9/07/2012

உயிரை பிய்த்து கொடுப்பேன்


நிலவை வருடும் மேகம்

நெஞ்சில் வளரும் தாகம்

காதல் கொள்ளும் வேகம்

கன்னி அவள் மோகம்


உயிரை பறிக்கும் காதல்

உணர்வை கொடுக்கும் கூடல்

உலகம் மறக்கும் ஆடல்

பெண்மை என்பதோ தேடல்


உலகப்பொருளில் ஒன்று

புரிய முடியா சொண்டு

வார்த்தை கொட்டும் போது

பொருளைத்தேடும் மனது


உதட்டில் முத்தம் வைத்து

கண்கள் நான்கையும் தைத்து

இடையில் உயிரை பித்து

கொடுப்பேன் அவளிடம் சொத்து

9/03/2012

உயிரைத்தரும் திரவம்உயிரைத்தரும்
திரவம் ஒன்று
உருவானதே
உன்னாலே
அதை
ஊற்றிவைக்கும்
பாத்திரத்தை
தேடுகின்றேன்

உன்னுள்ளே

9/02/2012

கசக்கிபோட்ட மலராய் ஆனேன்


உன்னை எண்ணி உருகித்தவிக்கும்

எந்தன் இதயம் என்ன கேட்கும்

கண்களிரண்டில் கண்ணீர் வந்து

காதல் என்று சொல்லித் துடிக்கும்


வானவெளியில் நிலவு ஒன்று

தன்னந்தனியாய் காத்து நிற்கும்

வங்கக்கடலின் அலைகள் நடுவே

வண்ணச்சூரியன் மெல்ல மறையும்


இரவின் விளிம்பில் இதயம் கனக்கும்

பெருமூச்சு எல்லாம் புயலாய் மாறும்

நெருப்பின் நடுவே காத்து நிற்கும் – என்

நினைவுகள் எல்லாம் பொசுங்கி போகும்


ஒற்றை நிமிடம் காத்து நின்று

உன் ஒற்றை வார்த்தை கேட்பதற்கு – நீ

சுற்றும் இடமெல்லாம் பின்தொடர்ந்தேன் – நான்

கசக்கிபோட்ட மலராய் ஆனேன்

8/24/2012

அடியேய் என் செல்லக்குட்டிஅடியேய் என் செல்லக்குட்டி – உன்

கண்கள் என்னைக் கொல்லுதடி

விடியும்வரை காத்திருந்து

விழிகள் இரண்டும் வேர்க்குதடி


உடையாய் உன் இடை வருடி - உன்

கால்கள் இரண்டிலும் நடை பழகி

விடையே தெரியா காதலுக்காய்

காத்திருப்பேன் என் கன்றுகுட்டி


சுவரே இல்லா சித்திரமாய் –என்

காதல் சுழன்று துடிக்குதடி

கலரே இல்லா என் வாழ்வில்

தூரிகை தந்து உதவிடடி


படியே தாண்டா பத்தினியாய் – உன்

பார்வை ஏன் கீழே போகுதடி

தவியாய் கிடந்தது தவிக்கின்றேன்

கொஞ்சம் பாசம் தந்து கொன்றுடடி