6/24/2012

காதலிப்போம் ஓடி வாடி


உதட்டோடு உதடொத்தி

உயிர் கசியும் இடை ஒத்தி

கண்மூடி தவமிருந்து

இதயத்தை பரிமாற்றி

நிலவோடு கதை பேசி

நெஞ்சினிலே சுவை தேடி

உயிர் மயங்கி உடல் நனைந்து

பிரம்மாவின் படையாகி

கையோடு கைப்பற்றி

இருள் மழையோடு உனைப்பற்றி

உலகத்தின் நிலைமறந்து

உயிர் மூச்சை பரிமாற்றி

உருவத்தில் அருவமாகி

உறவினிலே சொருபமாகி

நிலை கடந்தது எல்லை மறந்து

காதலிப்போம் ஓடி வாடி

6/15/2012

வெற்றிகொள்ளும் என் பிழைகள்


நினைவை தொட நினைக்கும் கனவு

கனவை தொலைத்து விட்ட இரவு

உயிரை பறிக்கும் உன் உறவு

உருகித்தவிக்கும் என் உலகு


உணர்வை கொடுக்கும் உன் ஸ்பரிசம்

உடம்பு முழுக்க உன் இரத்தம்

நரம்பை முறுக்கும் உன் பார்வை - என்

இரத்த நாளங்களில் வேர்வை


நெளிந்து வளையும் உன் உடம்பு

அதில் ஒடிந்து விழும் என் அன்பு

இமையால் வருடும் என் காதல்

உலகை மறக்கும் உன் ஊடல்


இடையின் வளைவில் என் படைகள்

பத்து விரல்களும் புது கணைகள்

வெட்கம் போடும் பல தடைகள் - அதை

வெற்றிகொள்ளும் என் பிழைகள்