2/10/2013

என் பாதியாய் உன்னை ஆக்குவேன்
நிலவில் முகம் தொலைத்தேன்
நிலவாய் உனை நினைத்தேன்

மனதில் உயிர் கொடுத்தேன்
மகிழ்ந்தே எனை மறந்தேன்

விரைவில் வந்துவிடு
என் விரதம் முடித்துவிடு

உறக்கம் தொலைத்த இருவுகளில்
என் ஏக்கம் தீர்த்துவிடு

கனவு நினைவிருக்கு
என் காதல் உயிர்மருந்து

பாதங்களில் முத்தம் வைத்து 
கண்களால்  உனை தைத்து 

பார்வையாலே கொள்ளுவேன் 
என் பாதியாய்  உன்னை ஆக்குவேன்