10/10/2010

தமிழினம் ஆண்டிடும் நாடு

நாவினில் ஊரும் நற்மிழ் கவிதை
பாவினில் புலம்பும் சொ
ற்களின் இனிமை
வாழ்வினில் கிடைக்கும் அனுபவக்கோவை
வந்திடும் கவிதையாய் செந்தமிழ் மேடை

தமிழினும் இனிது உலகினில் இல்லை
தமிழினை கொள்பவர் உலகினில் கொள்ளை
சுழன்றிடும் நாவில் சுட்டிடும் உண்மை -
செந்
தமிழினை காத்திட நெஞ்சினில் வன்மை

நெஞ்சினில் குண்டு பாய்ந்திடும் போதும்
செத்துமே உடல் சாய்ந்திடும் போதும்
செவ்விதழ் உதடுகள் தமிழென உரைக்கும்
தமிழினை காத்திட இரத்தத்தை இறைக்கும்

சத்தியம் என்பது சரித்திர உண்மை
வேள்விகள் செய்வது தமிழனின் கொள்கை
உண்மைகள் ஒரு நாள்
சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

27 comments:

எஸ்.கே said...

அருமை! சிறப்பாக உள்ளது!

யாதவன் said...

நன்றி எஸ்.கே நண்பா

வினோ said...

/ தமிழினும் இனிது உலகினில் இல்லை /

அருமை நண்பா....

யாதவன் said...

நன்றி வினோ நண்பா

ம.தி.சுதா said...

////தமிழினும் இனிது உலகினில் இல்லை
தமிழினை கொள்பவர் உலகினில் கொள்ளை////
தமிழ் தான் எங்கள் சொத்து நன்றி அண்ணா..

யாதவன் said...

நன்றி ம.தி.சுதா

ஹேமா said...

தமிழ்...தமிழ்...தமிழ்...உச்சரிக்கும்போது வலியும் சுகமும் ஒன்றாய்.இந்தத் தாகம் என்று தணியும் !

குத்தாலத்தான் said...

நல்லா இருக்கு தல !

கலாநேசன் said...

உணர்வான வரிகள். நல்கவிதை.

//உண்மைகள் ஒரு நாள் சுடட்டும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு// என்பது

//உண்மைகள் ஒரு நாள் சுடட்டும் அப்போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு// என்றிருக்கலாமோ?

யாதவன் said...

நன்றி ஹேமா குத்தாலத்தான் கலாநேசன்

Anonymous said...

தமிழுக்கு நன்றி சொல்ல இதை விட வேறென்ன சொல்ல...தமிழ் தமிழ்..

Lakshman said...

தமிழினும் இனிது உலகினில் இல்லை.

பூங்கோதை said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு கொந்தளிக்கும் உணர்வுகளை வீசும் வரிகள்... அழகான கவிதை. வாழ்த்துக்கள். கொஞ்சம் எழுத்துப் பிழைகளையும் கவனியேன் பிளீஸ்.....

rk guru said...

அருமை நண்பா....

மைந்தன் சிவா said...

சுழன்றிடும் நாவில் சுட்டிடும் உண்மை - செந்
தமிழினை காத்திட நெஞ்சினில் வன்மை
அருமையான வரிகள்!!என்று அடங்கும் இந்த சுதந்திரத் தாகம்!!

Jeyamaran said...

நண்பா அருமை....

சௌந்தர் said...

சத்தியம் என்பது சரித்திர உண்மை
வேள்விகள் செய்வது தமிழனின் கொள்கை
உண்மைகள் ஒரு நாள் சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு///

இந்த வரி ரொம்ப நல்லா இருக்கு

Thenammai said...

அருமை யாதவன்..

என்னோட பதிவை பாருங்க,..
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு இன்றோ நாளையோ உங்க படைப்பை அனுப்புங்க..

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

மரபுக்கவிதை படிக்கற அளவு எனக்கு வல்லமை பத்தாதே,ஆனா நல்லாருக்கு சார்.

Kousalya said...

உணர்ச்சி தெறிக்கும் வரிகள்....நன்றி சகோ.

sakthi said...

கொந்தளிக்கும் மன எண்ணங்களை கவிதையாய் எழுதியுள்ளீர்கள் அருமை யாதவன்

Chittoor.S.Murugesan said...

//உண்மைகள் ஒரு நாள் சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு//

Fine !

றமேஸ்-Ramesh said...

தமிழழகு கவியழகு

அன்பென்று கொட்டு முரசே said...

நல்ல வரிகள். நம் நெஞ்சம் சுட்டாலும் ஒட்டகத் தோல்களுக்கு உறைக்கப் போவதில்லை. தொடர்ந்து எழுதுங்கள் தோழா!

பிரஷா said...

உண்மைகள் ஒரு நாள் சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு///

இந்த வரி ரொம்ப நல்லா இருக்கு
அருமை நண்பா ....

பிரஷா said...
This comment has been removed by the author.