10/27/2010

நீ ஆணாக பிறந்ததனால் அப்படி என்ன கண்டுவிட்டாய்

உதட்டோரம் விழுவதெல்லாம்
உணர்வுள்ள வார்த்தைகளே
என் கழுத்தோடு கொடிகட்டி
துணையாக தொட்டது ஏன்

உனக்காக மாறவேண்டும் என
நீ எதற்காக நினைக்கின்றாய்
நீ ஆணாக பிறந்ததனால்
அப்படி என்ன கண்டுவிட்டாய்

எனக்கென்று தனி உணர்வு
அதற்குள்ளே பெரும் கனவு
அதை உணரக்கூட தெரியாமல்
ஆணாக ஏன் பிறந்தாய்

உடலிலே வலிமை கொண்டு
உணர்விலே வன்மைகொண்டு
அழகான பெண்மை என்னை
அடக்கி ஆள ஏன் வந்தாய்

மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன்

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/14/2010

காமம் கொண்ட கண்களினால் சேலை உரிந்து போகின்றது


நான் உரைக்க போவதெல்லாம்
நாவிலுள்ள உண்மைகளே

நலிவுற்று இருந்தாலும்
தளராத உறுதியுடன்
மெலிவுற்று இருந்தாலும்
கலங்காத கண்களுடன்

ஒரு சேலை தலைபெடுத்து
உடல்முழுக்க சுத்திவிட்டு
மானத்துடன் நிமிர்கின்ற
மறத்தமிழ் பெண்மணி

ஊர் விட்டு ஓடிவந்து
உற்றவரை நான் இழந்து
கைக்குழந்தை கதறலுடன்
கை ஏந்தி நிற்கின்றேன்

ஒருமுறை பசி போக்க
ஒன்பது இடம் ஏறிவிட்டேன்
ஒவ்வொரு இடமும் புதுசெனக்கு
ஒவ்வொரு கதையும் பழசெனக்கு

பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/10/2010

தமிழினம் ஆண்டிடும் நாடு

நாவினில் ஊரும் நற்மிழ் கவிதை
பாவினில் புலம்பும் சொ
ற்களின் இனிமை
வாழ்வினில் கிடைக்கும் அனுபவக்கோவை
வந்திடும் கவிதையாய் செந்தமிழ் மேடை

தமிழினும் இனிது உலகினில் இல்லை
தமிழினை கொள்பவர் உலகினில் கொள்ளை
சுழன்றிடும் நாவில் சுட்டிடும் உண்மை -
செந்
தமிழினை காத்திட நெஞ்சினில் வன்மை

நெஞ்சினில் குண்டு பாய்ந்திடும் போதும்
செத்துமே உடல் சாய்ந்திடும் போதும்
செவ்விதழ் உதடுகள் தமிழென உரைக்கும்
தமிழினை காத்திட இரத்தத்தை இறைக்கும்

சத்தியம் என்பது சரித்திர உண்மை
வேள்விகள் செய்வது தமிழனின் கொள்கை
உண்மைகள் ஒரு நாள்
சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/03/2010

காதலால் ஆதலால் கண்

10 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கண்களுக்குள் தூசு போகாமல்

18 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உனை பார்க்கும் கண்களுக்குள்
தூசு போகாமல்

28 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உன் கண்களுக்குள் தூசு போகாமல்

38 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
எம் செல்லகண்ணின்
கண்களுக்குள் தூசு போகாமல்

78 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கடைசிவரை வருபவளை
கண் கொண்டு பார்பதற்கு