8/16/2010

காதல் மொழி


உருகிய நீர்த்துளிகள்
கண்களினதா

பேசிய வார்த்தைகள்
உதடுகளினதா

இதயத்தின் துடிப்பு
காதலினதா

காக்கவைத்த நான்
காதலனா

காத்திருந்த நீ
காதலியா

ஏக்கத்தின் நிமிடங்கள்தான்
காதலா

ஏங்கவைத்து பார்பதுதான்
ஊடலா

செல்லககன்னம் சிவப்பதுதான்
கோபமா

சிவந்த உதடு சிரிப்பதுதான்
கூடலா

நெஞ்சோடு தலை வைப்பது
கெஞ்சவா

அண்ணார்ந்து முகம் பார்ப்பது
கொஞ்சவா

தோளில் கை போடுவது
அணைக்கவா

தொடாமலே கண் பார்ப்பது
...........


19 comments:

eraeravi said...

nandru. http://eraeravi.blogspot.com/

சௌந்தர் said...

காதல் மொழிக்கு ஏற்ற கவிதை

செல்வா said...

///நெஞ்சோடு தலை வைப்பது
கெஞ்சவா

அண்ணார்ந்து முகம் பார்ப்பது
கொஞ்சவா///
ஆஹா .. பட்டைய கிளப்பிடீங்க ...

கவி அழகன் said...

நன்றி eraeravi சௌந்தர் ப.செல்வக்குமார்

Anonymous said...

விரகதாபத்திலன் புலம்பல்போல....ஒவ்வொருவரியும் ஒரு எதிர்ப்பார்ப்போடு போகிறது..கடைசியில் "தொடாமலே கண் பார்ப்பது " விடையை ப‌டிப்பவ‌ர்க‌ளே நிற‌ப்பிகொள்ள‌வா...ஒரு ரித‌மாக‌...ந‌ல்ல‌ ந‌டை...பொன்.

கவி அழகன் said...

நன்றி Anonymous

Jeyamaran said...

சுருக்கமா சொல்லனும்னா சூப்பர்...................

கவி அழகன் said...

நன்றி Jeyamaran

ம.தி.சுதா said...

ஆஹா ஒருமுறை உணர்ச்சிகளை உசுப்பி விட்டிட்டிங்களே சகோதரா.

vidhusha said...

nandru yaadhavan

Anonymous said...

nice

கவி அழகன் said...

நன்றி vidhusha ம.தி.சுதா Anonymous

விஜய் said...

மிக அருமையான வார்த்தைகளை பிடிச்சு போட்டு இருக்கீங்க , வாழ்த்துக்கள்...
இன்னும் நிறையா எழுதுங்கள் ,

Ramesh said...

நன்றாக இருக்கிறது கவிதை...உங்கள் காதல் மொழியைப் போல் நான் கண்களின் மொழியைக் கவிதையாக்கி இருக்கிறேன்..அதையும் பாருங்கள்...

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_06.html

கவி அழகன் said...

நன்றி விஜய் ரமேஷ்

Kousalya Raj said...

வித்தியாசமான கேள்வி கணைகள்....!! அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

போட்டுத்தாக்குங்க

நிலாமதி said...

ஆகா நம்ம கவிக் கிழவன் கவி அழகன் ஆகி விடார் ....அழகன் ஆக்கியவர் யாரோ ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் அழகாய் இருகிறதுபெயர். வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!