9/29/2009

இறப்பதற்கு யாருமே இல்லை


நான் இறந்தால்


தூக்குவதற்கு

நாலுபேர் இல்லை

நான் இறந்தால்

கவலைப்பட

மூன்றுபேர் இல்லை

நான் இறந்தால்

அழுவதற்கு


இரண்டுபேர் இல்லை

நான் இறந்தால்

கொள்ளிவைக்க

ஒருமகன் இல்லை

நான் இறந்தபின்

இறப்பதற்கு குடும்பத்தில்

யாருமே இல்லை

9/28/2009

உடன்நிகழ்காலம்

உடன்நிகழ்காலம் உருக்குலைந்துவிட்டது

உண்மைகள் எல்லாம் தலைகுனிந்துவிட்டது

உணர்வுகள் இப்போ வரையருக்கப்பட்டது

உணர்ச்சிகள் எல்லாம் நிலைகுலைந்துவிட்டதுஉங்களுக்கென்றுதான் நிதி திரட்டப்பட்டது

உண்மையில் அது சூரையாடப்பட்டது

உயிரனங்கள் எல்லாம் ஊனமாக்கப்பட்டது

உள்ளங்களின் வேதனைவடுக்கள் புதைக்கப்பட்டதுஉச்சக்கட்டத்தில் உயிர்கள் கொல்லப்பட்டது

உத்தமர்கள்போல் ஊடகங்கள் காட்டிக்கொண்டது

உருவாகமுன்னே சிசுக்கலைப்பு நடந்தேறியது

உறவுகள் மூச்சுவிட முடியாது நசிக்கப்பட்டதுஉயிருடனே உடல்கள் எரிக்கப்பட்டது

உண்ணாநிலைகூட மறுக்கப்பட்டது

உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டது -இப்போ

உலகமே தமிழரை கைவிட்டுவிட்டது


9/18/2009

யார் நாம்


யாருக்குமுன் யார்போவார்

யார் இருப்பார் யார் அழைப்பார்


யாருக்கும் சொந்தமில்லா உலகில்


யாருடன் யார் இருப்பார்யாருக்கும் உதவாத உடலை


யாரையோ பெறுவதற்கு


யாதகம் பார்த்து


யாருக்கோ கட்டிவைப்பார்யாருடனும் யாருமில்லை

யாருக்கும் யாருமில்லை

யாரும் உதவிக்கில்லை-நாம்


யாரென்றும் தெரியவில்லை


பரம்பரையே ??????

வேரறுத்து குடும்பங்களை

ஊரைவிட்டு ஓடவைத்தார்

பாரினிலே யாவருக்கும்


உரிமையில்லை என்றுரைத்தார்வீடிளந்த எம்மரை வெறும்

வெட்டையிலே தங்கவைத்தார்


காடறுத் செய்த இடம்

வெள்ளத்தில் மூள்கினதோசோறுமில்லை யாருமில்லை

சொந்தம் கொள்ள பெயருமில்லை


நாடிலந்து நிற்கும்நிலை

நாயைவிட கேவலம்தான்வேளாமை செய்துவைத்தோம்
- பெரும்

பேராண்மை கொண்டுநின்றோம்


ஏலாமல் வந்தவனை


விருந்தோம்பி ஏற்றிவைத்தோம்பாலாறு பசுக்களையும்


சோராத வயல் குளங்களையும்


பரம்பரைக்கே சேர்த்துவைததோம்

இன்று பரம்பரையே இல்லையென்றோம்9/16/2009

ஒரு தாயின் கதறல்

நெருப்புக்குள் கண்வைத்தேன் என்

நெஞ்சுக்குள் சொல்வைத்தேன்


கண்முன் நடப்பவற்றை


கடவுளுக்கே சொல்லிவைப்பேன்

* * *

மார்பிலே பாலுமில்லை


வந்தாலும் பிள்ளையில்லை


பானையில் சோறுமில்லை


இருந்தாலும் கொடுக்க ஆக்களில்லை

* * *

ஊரக்கு போவதாற்காய்

எத்தனை நாள் ஏங்கிநின்றேன்


முள் வேலியைத்தாண்டுவதற்கு


எத்தனைநாள் மூச்சுவிட்டேன்

* * *

குளிப்பதற்கு இடமுமில்லை


குளித்துஉடைமாற்ற மறைவுமில்லை


குடிப்பதற்கே தண்ணீர் இல்லை


குந்திவிட்டு கழுவ எங்கேபோவோன்

* * *

பத்தடியில் வீடுதந்தார் அதற்குள்


பத்தபேரைத்தங்கவைத்தார்


படிப்பதற்கும் வசதியில்லை


படிக்கச்செல்ல பிள்ளையில்லை

***

செத்தவர்களை சொல்லவில்லை-அவர்கள்


செத்தனரா தெரியவில்லை


கைதானவர்கள் எங்கு இருப்பர்-அதில்


என் பிள்ளையுண்டா தெரியவில்லை


9/13/2009

தேவதையே எனது வேண்டுதல்
மழை வேண்டாம்

அகதி முகாம் வெள்ளத்தில்

மூழ்க வேண்டாம்


வெய்யில் வேண்டாம்

பச்சைக் குழந்தைகள் அகதி முகாமில்

சிறுவீட்டுக்குள் காயவேண்டாம்


காற்றுவேண்டாம்

அகதி முகாமில்

தொற்றுநோய்பரவி சாகவேண்டாம்


உணவு வேண்டாம்

விருந்தோம்பும் தமிழன்

கையேந்தி நிற்கவேண்டாம்


கனவு வேண்டாம்

கனவு முழுக்க இறந்த உறவுகளின்

நினைவுவேண்டாம்கடவுள் வேண்டாம்

பெற்றோரை இளந்து

ஆனாதைகளான பிள்ளைகள் வேண்டாம்


தண்ணீர்வேண்டாம்

குடிக்கும்தண்ணீர் எல்லாம்

தமிழனின் கண்ணீராக வேண்டாம்


கத்திவேண்டாம்

சிசுக்களை கருவிலேயே

கொல்ல வேண்டாம்


பாக்கிஸ்தான் இந்தியா சீனா வேண்டாம்

தமிழரை அளிக்க

ஆயுதம் அனுப்பவேண்டாம்


சர்வதேசம் வேண்டாம்

சதிதீட்டி தமிழரை

கொல்ல வேண்டாம்
தேவதையே நான் கேட்பது என்ன என்பது

உனக்கு புரியவேணும்

நான் தேவதையை அனுப்புகிறேன் இவர்களுக்கு


சுமஜ்லா

சக்தி


தியாவின் பேனா


அகல் விளக்கு


தமிழரசி

9/11/2009

தூங்கதே தம்பி