9/26/2012

லண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை நேரம்




வியாழன் கவி நேரம் 13-09-12


9/14/2012

கடவுளுக்கே அன்னையே



சொற்ப காசில்

சோறு திங்கும்

அற்ப வேலையாம்

குப்பை அள்ளுதலை

நித்தம் செய்யினும்

நெஞ்சை நிமித்திடும்

வீரப் பெண் இவள்

உயிரை மதிப்பவள்


உடம்பின் உள்ளே

இதயம் இருக்கும்

இதயத் துடிப்பில்

மனிதம் பிறக்கும்

எச்சங்களை

துச்சம் என

குப்பைக்குள்ளே

கொட்டினாலும்


கண்களிலே

கருணை சேர்த்து

நெஞ்சினிலே

தாய்மை வழிந்து

தன் கைகளாலே

அணைத்தெடுத்து

அம்மாவாகிய

பெண்மையே


நீ

கடவுளுக்கே

அன்னையே

நான் வணங்கிறேன்

உன்னையே

9/07/2012

உயிரை பிய்த்து கொடுப்பேன்


நிலவை வருடும் மேகம்

நெஞ்சில் வளரும் தாகம்

காதல் கொள்ளும் வேகம்

கன்னி அவள் மோகம்


உயிரை பறிக்கும் காதல்

உணர்வை கொடுக்கும் கூடல்

உலகம் மறக்கும் ஆடல்

பெண்மை என்பதோ தேடல்


உலகப்பொருளில் ஒன்று

புரிய முடியா சொண்டு

வார்த்தை கொட்டும் போது

பொருளைத்தேடும் மனது


உதட்டில் முத்தம் வைத்து

கண்கள் நான்கையும் தைத்து

இடையில் உயிரை பித்து

கொடுப்பேன் அவளிடம் சொத்து

9/03/2012

உயிரைத்தரும் திரவம்



உயிரைத்தரும்
திரவம் ஒன்று
உருவானதே
உன்னாலே
அதை
ஊற்றிவைக்கும்
பாத்திரத்தை
தேடுகின்றேன்

உன்னுள்ளே

9/02/2012

கசக்கிபோட்ட மலராய் ஆனேன்


உன்னை எண்ணி உருகித்தவிக்கும்

எந்தன் இதயம் என்ன கேட்கும்

கண்களிரண்டில் கண்ணீர் வந்து

காதல் என்று சொல்லித் துடிக்கும்


வானவெளியில் நிலவு ஒன்று

தன்னந்தனியாய் காத்து நிற்கும்

வங்கக்கடலின் அலைகள் நடுவே

வண்ணச்சூரியன் மெல்ல மறையும்


இரவின் விளிம்பில் இதயம் கனக்கும்

பெருமூச்சு எல்லாம் புயலாய் மாறும்

நெருப்பின் நடுவே காத்து நிற்கும் – என்

நினைவுகள் எல்லாம் பொசுங்கி போகும்


ஒற்றை நிமிடம் காத்து நின்று

உன் ஒற்றை வார்த்தை கேட்பதற்கு – நீ

சுற்றும் இடமெல்லாம் பின்தொடர்ந்தேன் – நான்

கசக்கிபோட்ட மலராய் ஆனேன்