7/01/2013

துடிக்கிறது என் இதயம்

செம்புழுதி கால் பதித்து 
சீருடை நாம் அணிந்து 
கை கோர்த்து நடை பழகி 
எம் மண் மீது புரண்டெழும்பி 

பூவரசு இலை பறித்து 
பீ பீ எல்லாம் செய்து ஊதி
வயல் வரப்பில் ஏறும்புகடிக்க 
வாய்க்கால் பக்கம் ஓடி கழுவ 

எட்டுக்கோடு கிளித்தட்டு 
கிட்டிப்புள்ளு கிரிக்கெட்டு
பெட்டை பெடியள் சேர்ந்து விளையாடி 
சிரித்த பொழுது இன்னும் என் நெஞ்சில் 

ஆட்டிலறி குறிவைக்க 
ஆயுதங்கள் வெறிகொள்ள
ஊர் சிதறி ஓடி ஒழிந்து
எட்டு திக்கும் சிதறி வாழ்ந்தோம் 

பனையோரம் குந்தியிருந்து 
பால் குடித்த கிழடுகளும் 
பனை ஓலை பாயிலே 
படுத்துகிடந்த வயதுகளும் 

இன்னும் ஊரில் இருந்து புறு புறுக்க
நாம் மட்டும் ஓடி வந்தோம் தூர தேசம் 

இன்னும் என் காதில் அவலக்குரல் 
இன்னும் என்கண்ணில் சாவின் கோலம் 
இன்னும் என் கால்களில் குருதி சிதறல் 
நினைவுகளில் வந்தாலும் 

மறுபடியும் மண்மிதித்து
வைரவருக்கு மடைபரப்பி 
வயல் இரங்கி அறுவடை செய்ய 
துடிக்கிறது என் இதயம்

அதற்க்கு காதல் என்று ........

சாலையோர தேநீர் கடையில் 
சற்று அமர்ந்திருந்து நீயும் நானும் 
குளிர் காற்றின் ஸ்பரிசம் வாங்கி சிலிர்த்து 
சிரித்த உதட்டுடன் சீண்டும் கண்களால் 
என்னை வெறித்து பார்த்து – நீ 
தேநீருக்கு முத்தம் குடுக்கையில்
என் இதயத்தில் ஒரு சூடு 
அதற்க்கு காதல் என்று ........

உதடு



அவள் காதலிக்க வந்த சம்சாரம்


புன்னகை பூக்கும் உன் முகத்திலே 
நான் பூக்கிறேன் அந்திபொழுதிலே 
கண்களில் தெரியும் அன்பிலே 
காதலின் அழகை காண்கிறேன் 

பெண்ணவள் எனக்காய் பிறந்தவள் 
அந்த பிரம்மனே எனக்கு சொன்னவன் 
விண்ணிலே ஒற்றை நிலவுதான்- அது 
விழுந்தது எந்தன் மடியில்தான் 

உள்ளத்தில் உணர்கிறேன் உச்சாகம்
அவள் உதட்டிலே இனிய மதுபானம்
கட்டி அணைக்கையில் அழகிய மின்சாரம் 
அவள் காதலிக்க வந்த சம்சாரம்

காதல் மொழி

சிமிட்டுகின்ற கண்களிலே 
சினுங்குகின்றது - உன் 
காதல் மொழி

இரவுக் கவிதைகள்


ஒரு இரவில்
ஒரு நிலவு
இரு விழிகள்
தூங்குது
..................................
கறுப்பு இரவில்
கண்கள் மூடியபின்
நிலவு எதற்கு
..................................
நிலவின் ஒளியில்
கண்கள் இருட்ட
இரவு வணக்கம்
................................
இரவில் விழிகள் தூங்க 
இரவு எங்கே தூங்கும்
..................................
சோம்பி இருப்பவனுக்கு விடிகாலை எதற்கு
சுறுசுறுப்பாய் இருப்பவனுக்கு இரவு எதற்கு
...................................
இரவின் நிறம் கறுப்பெனில்
கண்களை மூடி என்ன பயன்
.......................................
இரவு
இறக்க
விடிய
பிறக்க
இரவில்
இறந்து
விடியப்
பிறக்கிறான்
மனிதன்

காத்திருப்பு




வாணம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ

பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ

கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ

காதல் என்று உணர்ந்தேன்




பூந்தொடியில் இருப்பவை
பூக்கள்தானென்று நினத்திருந்தேன்
உன்னை கண்டபின்பே - அவை
வண்டுகளின் காதல் என்று உணர்ந்தேன்

வெட்கம்



பறக்கும் தாவணியின் அழகை
மறைக்கும் உந்தன் வெட்கம்
கண்களை மூடிக்கொள்கிறது
நான் காட்டவில்லை என்று