4/10/2012

நினைவை எண்ணி தவிக்கின்றேன்

அறுகம்புல் நுனியிலே

அழகாய் விழுந்த பனித்துளியே

என் இதயத்தை குளிர்வித்து

இமை துடிக்க வைத்துவிட்டாய்


அதிகாலை பொழுதினிலே

அலாரமணி அடிக்கையிலே

போர்வையின் கதகதப்பில்

கனவுலகில் நான் மிதந்தேன்


சிறு துளியாய் நீ விழுந்து - என்

உடல்முழுதும் நீ தவழ்ந்து

குளிர்கின்ற காலையிலே

சிலிர்க்கின்ற உணர்வுதந்தாய்


கள்ளத்தனமாய் சூரியனோ –என்

என் யன்னல்வழி பார்க்கமுன்பே

சூடான கோப்பி வேண்டும்

இரு உதடு சுவைக்கவேண்டும்


காலைக்குயில் கூவும் சத்தம்

பாடலாக மாறி வந்து

காதினிலே இசை ஊட்டவேண்டும்

காதலோடு நான் வாழவேண்டும்


வேலைக்குப்போகும் மனிதரெல்லாம்

வேகமாக ஓடிவிட

தண்ணீரில் தலை குளிக்கவேண்டும்

தனிமையில் நான் பாடவேண்டும்


வாசலில்ப்போய் கோலம்போட்டு

வாசமுள்ள பூ ஒடித்து

கூந்தலில் நான் சூடவேண்டும்

கை எடுத்து இறை வணங்க வேண்டும்


இன்றைக்குமட்டும் என்வீட்ட்டில்

மற்றவர்கள் குருடாக

துள்ளி குதித்து ஆடவேண்டும்

காதலோடு நடை போடவேண்டும்


நாள் முழுக்க காதலிலே

நான் மிதக்கும் ஆசையிலே

கனவு கண்டு மகிழ்கின்றேன்

நினைவை எண்ணி தவிக்கின்றேன்

4/02/2012

நினைவு மட்டும் என் நெஞ்சில் என்றும் நிக்கும்

கரை கழுவும் அலையினிலே

மனம் நனையும்

கரையினிலே காத்திருக்கும்

கணம் கனக்கும்


புயலினிலே புன்னகை

விழுந்தெழும்பும்

உன் மௌனம் என்னுள்

அலையைவிட ஓங்கி அடிக்கும்


தனிமையிலே கடல் பார்க்கும்

கண்கள் நனையும்

அலைகள் எல்லாம் நுரைகக்கி

கரையில் சாகும்


விரைவினிலே வந்துவிடு

எனக் கேட்க்கும்

என் இதய துடிப்பினிலே

உயிர் போகும்


நடை பயிலும் கால்கள்

கரையில் தடம்புரளும்

நடந்துவந்த பாதை அது

அழிந்துபோகும்


துயர் துடைக்கும்

என்னவனின் இருகரங்கள்

நினைவு மட்டும் என் நெஞ்சில்

என்றும் நிக்கும்


எனக்கு மட்டும் கனவு காணும்

என்வாழ்க்கை

என்னை மட்டும் கொன்று போட்டால்

அது போதும்