
எழுதுவது என் இலக்கு - என்
இனத்தினது பொருள் விளக்கு
அகத்தினிலே இருள் அகற்று
உண்மைக்கு நான் பொறுப்பு
செந்தமிழ் வீரம் பகை அடக்கு
சிந்திய குருதியில் தமிழ் எழுத்து
வரும்பகை முடிக்கும் படை நடத்து
தரணியில் நீயே தமிழ் நடப்பு
சாவினில் கூட தாகம் உண்டு
சரித்திரம் படைத்திடும் வேகம் இயம்பு
வீழ்தலில் வீரம் குறைவதில்லை
வீழ்தபின் உயர்ந்தவர் உலகினில் கொள்ளை
தாயினும் மேலாம் தாயக கனவு
மாண்டவர் மூச்சில் வென்றிடும் வீச்சு
சுதந்திர காற்றை சுவாசிக்கும் குழந்தை
செந்தமிழ் நாளை ஆண்டிடும் உலகை
Tweet | |||||
7 comments:
சிந்திய குருதியில் தமிழ் எழுத்து. Anna, what a beautiful verse?? I like this.
/ தாயினும் மேலாம் தாயக கனவு
மாண்டவர் மூச்சில் வென்றிடும் வீச்சு
சுதந்திர காற்றை சுவாசிக்கும் குழந்தை
செந்தமிழ் நாளை ஆண்டிடும் உலகை /
உண்மை இதுவே.. தமிழும், தாயகமுமே முச்சு..
வரிகள் தூள் கிளப்புது.
பேசாம ஒரு கட்சி ஆரம்பிங்க.
நல்ல உணர்ச்சி வேக வார்த்தைகள் ...வார்த்தைகள் அருமை. வீழ்ந்த பின் .....வீழ்ச்சி ....என திருத்துங்கள்...ஒவ்வொருஈழத் தமிழனுக்கும் ......வரவேண்டிய உணர்வு.......
நன்றி நண்பர்களே
நன்றி நிலாமதி அக்க உங்கள் திருத்தத்துக்கு
வீழ்தலில் வீரம் குறைவதில்லை!!!!!!
நெஞ்சுக்குள் தகிக்கும் என்னுணர்வு உன் வரிகளாக..
அப்புறம் அதென்ன மெல்ல மெல்ல மரபுக்குள் காதலோ..
அழகாக இருக்குடா வார்த்தைகள்…வாழ்த்துக்கள்
Post a Comment