11/25/2010

உன்னில் தலைசாயா ஆசையடா


முற்றத்து மரங்களிலே
முக்கனிகள் பழுத்திருக்க
சுற்றத்து கண்களெல்லாம்
கனி பறிக்க காத்திருக்க

ஊர் சுற்ற வந்த மச்சான்
எனை பறித்து போனதென்ன
என் மனதிற்குள் புகுந்ததென்ன
மனசோடு சேர்ந்ததென்ன

மரம் சுற்றும் கிளிகளெல்லாம்
பழம் தின்ன வந்ததென்ன
உனைப்பார்த்த பின்னாடி
மனம் மாறிப்போனதென்ன

தலைவாசல் ஓரத்தில்
விழி பார்த்து வீற்றிருந்தேன்
உன் வழிகான காத்திருந்தேன்
உன் மனம் சேர தவமிருந்தேன்

கிளி பார்த்த போதினிலே
கனி ஆசை கொள்ளுதடா
எனைக்கடிகாமல் விடுவாயோ
தவிப்பாக உள்ளதடா

உன்னில் தலைசாயா ஆசையடா

15 comments:

Kousalya said...

very nice....

அன்பரசன் said...

//மரம் சுற்றும் கிளிகளெல்லாம்
பழம் தின்ன வந்ததென்ன
உனைப்பார்த்த பின்னாடி
மனம் மாறிப்போனதென்ன//

ஓஹோ அப்படியா?

கே.ஆர்.பி.செந்தில் said...

தலைவரே நீங்கள் சினிமாவுக்கு பாடல் எழுத ஏன் முயற்சி செய்யக்கூடாது....

ராஜவம்சம் said...

சூப்பர்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஊர் சுற்ற வந்த மச்சான்
எனை பறித்து போனதென்னஃஃஃஃ

இலங்கையிலும் ஒர வாலி இரக்கா என்ற கேட்டால் நான் உங்களைத் தான் காட்டுவேன்...

வினோ said...

யாதவன் அருமை....

Lakshman said...

அண்ணா, அருமையான வரிகள். என்ன ஒரு கற்பனை?

மைந்தன் சிவா said...

சூப்பர் கவிதை யாதவன்...எங்க காண காலமா காணேல?

வெறும்பய said...

rompa nallaayirukku..

. said...

அருமையான வசனம்

பிரஷா said...

சூப்பர் கவிதை நண்பா..

vanathy said...

super!

எஸ்.கே said...

சூப்பர்!

sakthi said...

நல்லா இருக்கு யாதவன்!!!

Mohamed Faaique said...

அருமையான வரிகள். என்ன ஒரு கற்பனை?