4/02/2012

நினைவு மட்டும் என் நெஞ்சில் என்றும் நிக்கும்

கரை கழுவும் அலையினிலே

மனம் நனையும்

கரையினிலே காத்திருக்கும்

கணம் கனக்கும்


புயலினிலே புன்னகை

விழுந்தெழும்பும்

உன் மௌனம் என்னுள்

அலையைவிட ஓங்கி அடிக்கும்


தனிமையிலே கடல் பார்க்கும்

கண்கள் நனையும்

அலைகள் எல்லாம் நுரைகக்கி

கரையில் சாகும்


விரைவினிலே வந்துவிடு

எனக் கேட்க்கும்

என் இதய துடிப்பினிலே

உயிர் போகும்


நடை பயிலும் கால்கள்

கரையில் தடம்புரளும்

நடந்துவந்த பாதை அது

அழிந்துபோகும்


துயர் துடைக்கும்

என்னவனின் இருகரங்கள்

நினைவு மட்டும் என் நெஞ்சில்

என்றும் நிக்கும்


எனக்கு மட்டும் கனவு காணும்

என்வாழ்க்கை

என்னை மட்டும் கொன்று போட்டால்

அது போதும்

20 comments:

இராஜராஜேஸ்வரி said...

எனக்கு மட்டும் கனவு காணும்

என்வாழ்க்கை வாழ்த்துகள்..

கூடல் பாலா said...

கவிதை அருமை!

Lakshman said...

superb anna

நிரூபன் said...

வணக்கம் பாஸ்...

தனிமையிலே கடல் அலையைப் பார்த்தபடி வாடும் உள்ளத்தின் உணர்வுகள் இங்கே கவிதையாகப் பிரவாகித்திருக்கிறது.

அருமை.

Unknown said...

//உன் மௌனம் என்னுள்

அலையைவிட ஓங்கி அடிக்கும்//

இந்த வரிகள் ஈர்ப்புடையதாக இருக்கிறது. ஆனால் கவிதையின் இறுதி வரிகள் எனக்கு விளங்க வில்லை.
\

rajamelaiyur said...

//நடை பயிலும் கால்கள்

கரையில் தடம்புரளும்

நடந்துவந்த பாதை அது

அழிந்துபோகும்




துயர் துடைக்கும்

என்னவனின் இருகரங்கள்

நினைவு மட்டும் என் நெஞ்சில்

என்றும் நிக்கும்

//

அருமையான வரிகள் ...

rajamelaiyur said...

கவிதை மிக அருமை

ஹேமா said...

நிச்சயம் இந்தக் கவிதை உங்களவள் எழுதியது.உணர்வின் நனையல் !

தனிமரம் said...

கடல் அலைமீது தனிமையின் சோக அலையை பதியம் இட்டு விரத்தியில் தீட்டிய கவிதை ரசித்தேன் கவிக்கிழவன் தான் .

அருணா செல்வம் said...

கவிஞர்களின் காதல் என்றுமே
கவிதையில் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கும். அதற்கு தோல்வியோ முடிவோ கிடையாது கவி அழகன்.
அழகான கவிதைகள். வாழ்த்துக்கள் நண்பா.

மாலதி said...

தனிமையிலே கடல் பார்க்கும்

கண்கள் நனையும்

அலைகள் எல்லாம் நுரைகக்கி

கரையில் சாகும் //ரசித்தேன்அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான கவிதை நண்பா.

சென்னை பித்தன் said...

சிறப்பான கவிதை

Anonymous said...

சோகமும், சாந்தமும் கூடிய கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

உணர்வு பூர்வமான கவிதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வாழ்க்கை ஏன் கொன்று போட வேண்டும்,அது அதன் வேலையில்லையே?வாழ்வைக்கச்சொல்லலாமே/

krishy said...

ரசித்தேன்அழகான கவிதைகள் ...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

http://tamil.dailylib.com

To get vote button
http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

ம.தி.சுதா said...

சுவடுகளை விட்டுச் செல்லும் வரிகள் என்றும் அருமையிலும் அருமையே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

Athisaya said...

""கரை கழுவும் அலையினிலே

மனம் நனையும்

கரையினிலே காத்திருக்கும்

கணம் கனக்கும்""

கடல்வெளிகளில் பார்வை படர்ந்தால் மனம் உடனே கவி சொல்லிவிடும்.அனுபவித்ததுண்டு இந்த அழகையும் வலியையும்..வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா said...

எனக்கு மட்டும் கனவு காணும்

என்வாழ்க்கை //

நமக்கு மட்டும் கனவு காணும்
நம் வாழ்க்கை பலவேளை அப்படித்தான் வாழ்வேண்டும் .அருமை தோழா பாராட்டுகள்..