9/29/2010

என் படுக்கையறை ரகசியங்கள்


தூக்கம் வந்து தூங்கவில்லை
தூங்காவிடில் கண்கள் கலங்கிவிடும்
* * *
குளிர்வதால் போர்க்கவில்லை
சோகத்தை மறைக்க போர்க்கிறேன்
* * *
சுகத்திற்கு தலையணை வைக்கவில்லை
என் கண்ணீரை உருஞ்ச வைக்கிறேன்
* * *
வசதிக்கு மெத்தையில் தூங்கவில்லை
உனை தாங்கும் நெஞ்சம் இதமாக தூங்க .....

9/27/2010

என் தலையணை ரகசியம்


1

என் காதல் கசங்கியது போல்

தலையணையும் கசங்கியுள்ளது
காலையில்

* * * * * * *
2

உன் நெஞ்சில்ஈராம் இல்லாததால்
என் தலையணை முழுக்க ஈராம்
முழு இரவும்

9/24/2010

முதல் இரவில் ஒரு கவிதை


செல்ல செல்ல பார்வையால்
மெல்ல மெல்ல மோதி
சின்ன சின்ன புன்னகையாள்
நெஞ்சம் வரை தாவி
கள்ள கள்ள தொடுகையால்
காதல் பரிமாறி
வெட்க்கபடும் போதினிலே
நான் வெற்றி கொண்டேன்
பூங்குயிலே

9/22/2010

நான் பித்து பிடித்து திரிகின்றேன்


சின்ன மழைத்துளி
யன்னலில் முட்டிமோதி
நெஞ்சத்தை தொட்டுப்பார்க்க

ஒற்றை உருவத்தில்
இரு விழிகள்
ஓராமாய் எட்டிப்பார்க்க

மெல்ல நடையில்
குடைபிடித்து
இடை அசைத்து போறாள்

சொல்ல வரியின்றி
சொர்க்க வரிகளை
தேடுகின்றேன்

வெல்ல வழியிருந்தும்
பித்து பிடித்து
திரிகின்றேன்

9/20/2010

காத்திருக்கிறேன் அன்புத்தோழி


பொத்தி வைத்த காதல் மொட்டு
முட்டி மோதி பூக்குதிங்கு
வெட்கத்துடன் நாணம் சேர்த்து
வெட்டும் வாளாய் குத்துது இங்கு


சொந்தக்ககனவுகள் சேர்த்துவைத்து
சொல்லவளியின்றி காத்திருந்து
சொந்தமானதும் சொல்லப்போறேன்
ஜோடி சேர்ந்து வாழப்போறேன்


தொட்ட இடத்தில் முத்தமிட்டு
தொடாத இடத்தில் கன்னமிட்டு
மொட்டு வைத்த காதல் மழையாய்
சொட்டு சொட்டாய் தூரப்போறேன்


சொந்த மன்னவன் எந்தன் மடியில்
சொர்கவைக்கும் உதடுசிரிப்பில்
சொல்லவந்ததை சொல்லிவிடுவான்
சொல்லாமலே அள்ளிவிடுவான்

9/16/2010

நான் சித்தனாய் போனதென்ன


யன்னல் வழி கண்கள் பார்க்க
காதல் வரி தானாய் கொட்ட
கவிதையான மாயமென்ன
மனதை தொட்ட காதலென்ன

சாரல் துளி எட்டிபார்க்க
யன்னல் கதவு தானாய் மூட
நெஞ்சை மூடி வைப்பதென்ன
கன்னமிட்டு பார்பதென்ன

தன்னந் தனி தனிமையிலே
சின்னவிழி பூங்குயிலே
சிலிர்த்து விட்டு போவதென்ன
நான் சித்தனாய் போனதென்ன

9/15/2010

செந்தமிழ் நாளை ஆண்டிடும் உலகைஎழுதுவது என் இலக்கு - என்
இனத்தினது பொருள் விளக்கு
அகத்தினிலே இருள் அகற்று
உண்மைக்கு நான் பொறுப்பு

செந்தமிழ் வீரம் பகை அடக்கு

சிந்திய குருதியில் தமிழ் எழுத்து
வரும்பகை முடிக்கும் படை நடத்து
தரணியில் நீயே தமிழ் நடப்பு

சாவினில் கூட தாகம் உண்டு

சரித்திரம் படைத்திடும் வேகம் இயம்பு
வீழ்தலில் வீரம் குறைவதில்லை
வீழ்
தபின் உயர்ந்தவர் உலகினில் கொள்ளை

தாயினும் மேலாம் தாயக கனவு

மாண்டவர் மூச்சில் வென்றிடும் வீச்சு
சுதந்திர காற்றை சுவாசிக்கும் குழந்தை
செந்தமிழ் நாளை ஆண்டிடும் உலகை

9/06/2010

ஆதியும் நீ அந்தமும் நீ

நான் எழுத நினைத்த
கவிதை
நீ

நான் சொல்ல நினைத்த
காதல்
நீ

செம்மலர் இதழ்
தேனில்
நீ

செந்தமிழ் தரும்
பாவில்
நீ

வென்நிலா வாழும்
விண்ணில்
நீ

வீரர் நடைபோடும்
மண்ணில்
நீ

வெட்டி விளையாடும்
கண்ணில்
நீ

என்னை வெல்லவந்த
வேங்கை
நீ