1/30/2012

புதைந்துபோன ஆசைகள்


காத்திருக்கிறது மண்
ஒரு விதைக்காக

காத்திருக்கிறது நீர்
ஒரு துளிர்க்காக

காத்திருக்கிறது பனி
ஒரு இலைக்காக

காத்திருக்கிறது வண்டு
ஒரு மலருக்காக

காத்திருக்கிறது காதல்
ஒரு மலர்க்கொத்துக்காக

காத்திருக்கிறான் இறைவன்
ஒரு மாலைக்காக

காத்திருக்கிறது சூரியன்
அதை சுட்டெரிப்பதற்க்காக

காத்திருக்கிறேன் நான்
கூந்தலில் சூட்டுவதற்க்காக

யாருக்காக அந்த மலர்
காத்திருக்கிறது

யாருமே கேட்பதில்லையே
புதைந்துபோன ஆசைகள்

1/22/2012

சோடி சேரும் நாளை எண்ணி

உன் ஈர விழியில்
ஒரு துளி

நான் ஏங்கி தவிக்கிறேன்
தனிமையில்


என் தனிமை தாங்கும்
மர நிழல்

உன் சோகம் சொல்லும்
கார்முகில்
ஊஞ்சல் ஆடும்
இருமனங்கள்

சேர துடிக்கும்
இரு நிறங்கள்


பாசத்தோடு
அருகில் இருந்து

உச்சி நெத்தி கோதும்
உண்மை காதல்


கரம் பிடித்து
இதழ் குவித்து

சோடி சேரும்
நாளை எண்ணி

1/07/2012

காதல் செடிக்கு கண்ணீர் வேண்டாம்


இளமை வாழும்
இனிய மலர்கள்
பனியைத் தாங்கி
பூத்து குலுங்கும்

இதமாய் விரியும்
ஒவ்வொரு இதழும்
மென்மை சேர்த்து
இதயம் வருடும்

சுவாசம் பட்டு
வாடும் வதனம்
முத்தம் வாங்க
ஆசை கொள்ளும்

வெப்பம் தாங்கா
மடியும் பெண்மை
நெஞ்சில் சாய
ஏங்கி நிற்கும்

பூக்கும் செடிக்கு
தண்ணீர் ஊற்றி
குளிர்மை காக்கும்
பணியை செய்வோம்

காதல் செடிக்கு
கண்ணீர் வேண்டாம்
கண்கள் சிரிக்க
காதல் கொள்வோம்

1/01/2012

ஏங்கி துடிக்கும் இரு இதயங்கள்


ஓடி ஒழிந்த வருடங்கள்
ஓராயிரம் நினைவுகள்
சேமித்து வைத்த கனவுகள்
மீட்டலை மீட்கும் வகுப்புகள்

தொட துடிக்கும் மனசு
தொடருகின்ற நினைவு
சேர்த்துவைத்த பரிசுப்பொருள்
பரிமாறிய வாழ்த்து அட்டைகள்

பாசத்தின் உண்மைகளை
பறைசாற்றும் பல்லவிகள்
பார்க்காமல் இருந்தே
பழகிப்போன உணர்வுகள்

கூட்டாக சேர்த்து வைத்து
கொண்டாட காத்திருக்கும்
சந்தோஷ நாளை எண்ணி
ஏங்கி துடிக்கும் இரு இதயங்கள்