9/04/2011

அவசரத்தில் விடிந்த அதிகாலை


கரும்பறவை சிறகடித்து
வானவெளியில் பறக்க
சிறு கீற்றாய் சூரிய ஒளி
உலகம் எங்கும் பரவ
வெட்கம் கொண்ட மேகக்கூட்டம்
விலகியே ஓடிவிட
புலர்ந்தது காலை
புதுப்பொழிவுதர

இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்

ஊருக்கு குறுக்கே ஓடும்
கறுப்புத்தார் ரோட்டு
உடல் முழுக்க ஈரமாகி
தலை குனியும் புல்லு
நீட்டி நிமிர்ந்து நிற்க்கும்
அணையாத மின்கம்பம்
புலர்கின்ற காலைக்கு
தீபமிடும் பூசாரி

ஆங்காங்கே அசையத்தொடங்கும்
மனித வலுக்கூ ட்டம்
அவர்களை ஏத்திச்செல்லும்
வாகனங்களின் சத்தம்
ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை 51 comments:

இராஜராஜேஸ்வரி said...

வெட்கம் கொண்ட மேகக்கூட்டம்
விலகியே ஓடிவிட
புலர்ந்தது காலை
புது பொழிவுதர//

பொலிநத காலைக்கு வாழ்த்துக்கள்.

வலையுகம் said...

நண்பரே கவிதை நல்லாயிருக்கு.

//கரும்பறவை சிறகடித்து
வானவெளியில் பறக்க
சிறு கீற்றாய் சூரிய ஒளி
உலகம் எங்கும் பரவ
வெட்கம் கொண்ட மேகக்கூட்டம்
விலகியே ஓடிவிட
புலர்ந்தது காலை
புது பொழிவுதர//

என் கிராமம் நினைவுக்கு வருகிறது நண்பரே

வாழ்த்துக்கள் தமிழ்மணம் 1

Rathnavel Natarajan said...

நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

ஜெயமாறன் நிலாரசிகன் said...

மிகவும் அருமை நண்பரே அசத்தல்

K said...

இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்////

வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க!

ஸார், நீங்க எழுதிய இந்த சூப்பர் கவிதை அப்படியே ஒரு கிராமத்துக்கு நம்மள கூட்டிக்கிட்டுப் போகுது ஸார்! சூப்பரா இருக்கு!

கிராமத்து காக்கை said...

மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்

ரசிக்க தகுந்த வரிகள்

Mohamed Faaique said...

சின்ன வயசுல பார்த்த காலை காட்சி அப்படியெ கண் முன் விரிந்தது.

Unknown said...

நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை

இது காலைப் பொழுதுதனை
இதமாக கவி வடித்தீர்
மது மாலைப் பொழுதுதனை
மறவாமல் கவி வடிப்பீர்
புது மாலைத் தமிழுக்கே
போடுவீர் கவி அழகா
எது மாலைத் தெரியாமல்
ஏங்கட்டும் வண்டி னமே

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

ஹிஹி கவிதை!!நானும் இதென்ன இப்படியே போகுது எப்பிடி முடிய போகுதெண்டு பார்த்தேன்..ம்ம் மனிதர்களில் முடிந்தது!

இமா க்றிஸ் said...

கவிதை அழகு, பாராட்டுக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாய் சொன்னீர்கள்.

அதற்கெல்லாம் எங்கே நமக்கு நேரம் இருக்கிறது..???

Yaathoramani.blogspot.com said...

அடேயப்பா கவிதையைப் படிக்க படிக்க
கிராமத்து காலைக் காட்சி மனதினுள்
என்னமாய் விரிகிறது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 8

நிகழ்வுகள் said...

'பிள்ளைங்களா காலைக்காட்சியை பற்றி எழுதுங்கோ' எண்டு அன்று ஆசிரியர் சொல்லும் போது, கவிகிழவன் மட்டும் எனக்கு அருகில் இல்லாமல் போய்விட்டாரே...)

நிகழ்வுகள் said...

அருமை பாஸ், முக்கியமாய் சந்தம் தப்பாமல் .......அழகாய் இருக்கு .

காட்டான் said...

வணக்கம் மாப்பிள  உங்கட கவிதைகளை தொடர்து வாசித்து வருகிறேன் நீங்கள் ஒவ்வொரு பதிவுகளிலும் வெவ்வேறு விடயங்களை தொட்டுச்செல்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..எப்போது மின் கம்பங்கள் கிராமங்களை ஊடுறுத்து செல்லத்தொடங்கியதோ  அப்போதே சூரிய உதயத்தை மறந்துவிட்டோம்.. 

நீட்டி நிமிர்ந்து நிற்க்கும்
அணையாத மின்கம்பம்
புலர்கின்ற காலைக்கு
தீபமிடும் பூசாரி

அழகான வரிகளுடன் கூடிய உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்...

kowsy said...

காலைப் பொழுதை ரசித்து அதில் கற்பனையைச் சேர்த்து இரசித்து இன்பம் காணும் யாதவனே! உங்கள் கவிதைகள் நன்றாக களைகட்டுகின்றன. காதலையும் மீறி இயற்கைளையும் இரசிப்பேன் எனக் காட்சிப்படுத்தியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

சுதா SJ said...

கவிதை கொஞ்சும் தமிழில் இயற்கை வர்ணனையுடனும் அசத்துது தல..

சுதா SJ said...

//ஆங்காங்கே அசையத்தொடங்கும்
மனித வலுக்கூ ட்டம்
அவர்களை ஏத்திச்செல்லும்
வாகனங்களின் சத்தம்
ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை///


மனிதனின் அவசர கால இயந்திர வாழ்க்கையை அழகாக படம் புடித்து காட்டு உள்ளீர்கள். சூப்பர்

சுதா SJ said...

காதலியின் வர்ணனை கவிதைகளை படித்து படித்து திகட்டிய நேரத்தில் இது புதுசா இருக்க
நன்னா இருக்கு

ரிஷபன் said...

ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை

எதிலுமே பரபரப்பாய் இருக்கும் மனிதர் இயற்கையை ரசிக்க நேரம் கண்டு பிடிக்க வேண்டிய நிலை!

M.R said...

தமிழ் மணம் 11

அழகான காட்சியை அழகான வரிகளில் கவிதையாய் தந்துள்ளீர்கள் நண்பரே .பகிர்வுக்கு நன்றி

சம்பத்குமார் said...

//ஆங்காங்கே அசையத்தொடங்கும்
மனித வலுக்கூ ட்டம்
அவர்களை ஏத்திச்செல்லும்
வாகனங்களின் சத்தம்
ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை //

அருமையான வரிகள் நண்பரே..

தொடரட்டும் உங்கள் கவிதைகள்

நட்புடன்
சம்பத்குமார்

நிரூபன் said...

வணக்கம் நண்பா,


புலர்ந்தது காலை
புது பொழிவுதர//
இங்கே புதுப் பொலிவு தர என்று வந்தால் சிறப்பாக இருக்கும்

நிரூபன் said...

கரும்பறவை சிறகடித்து
வானவெளியில் பறக்க
சிறு கீற்றாய் சூரிய ஒளி
உலகம் எங்கும் பரவ
வெட்கம் கொண்ட மேகக்கூட்டம்
விலகியே ஓடிவிட
புலர்ந்தது காலை
புது பொழிவுதர//

இதமான காலைப் பொழுதில் ஆதவன் உலகை நோக்கித் தன் இறக்கையினை விரிப்பதனைக் கவிஞர் இயற்கை வர்ணனை கலந்து சொல்லியிருக்கிறாரே..

கவனிக்க: ஆதவன்...யாதவன் அல்ல.

நிரூபன் said...

இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்//

மரங்களைப் பெண்ணிற்கும்,
குயில்கள் இசை பாடிப் பொழுது விடிந்ததனை அறிவிப்பதனை குருக்களின் செயலுக்கும் ஒப்பிட்டு பொழுது புலர்ந்து விட்ட சேதியினைச் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...

ஊருக்கு குறுக்கே ஓடும்
கறுப்புத்தார் ரோட்டு
உடல் முழுக்க ஈரமாகி
தலை குனியும் புல்லு
நீட்டி நிமிர்ந்து நிற்க்கும்
அணையாத மின்கம்பம்
புலர்கின்ற காலைக்கு
தீபமிடும் பூசாரி//

ஊரின் அழகினை எவ்வாறு சொல்லியிருக்கிறீங்க...என்ன ஒரு அற்புதமான வரணனை...

சான்ஸே இல்ல பாஸ்..
வாரத்தில் ஒரு கவிதை வந்தாலும் சூப்பரா முழு நாளும் உங்கள் பதிவு வந்ததனைப் போன்ற உணர்வினைத் தருகின்றது பாஸ்.

ஒவ்வோர் வரிகளிலும் இயற்கைத் தாயினையும், கண்களில் காலைப் பொழுதில் தெரியும் காட்சிகளையும் வெகு சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...

ஆங்காங்கே அசையத்தொடங்கும்
மனித வலுக்கூ ட்டம்
அவர்களை ஏத்திச்செல்லும்
வாகனங்களின் சத்தம்
ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை //

இயந்திர வேகத்தில் இயற்கையினை ரசிக்க முடியாதவர்களாகி, வேகமாக மனிதர்கள் இயங்குகிறார்கள், என்பதனை ஒருக்காலும் நின்றதில்லை வாகனங்கள் எனும் தொடர் மூலம் சொல்லியிருக்கிறீங்க.

சூப்பர் பாஸ்.

நிரூபன் said...

அவசரத்தில் விடிந்த அதிகாலை//

இயற்கையினை ரசிக்க முடியாது இயந்திர வேகத்தில் பயணிக்கும் நவீன மனிதர்களின் உணர்வுகளைத் தாங்கி வந்துள்ளது.

மாய உலகம் said...

அழகாக புலர்ந்த அற்புதமான கவிதை கலக்குங்க நண்பா

மாய உலகம் said...

இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்//

இயற்கை அழகினை அழகான கவிதையில் அற்புதமான நடையில் அசத்திவிட்டீர்கள் நண்பா

ஆகுலன் said...

அதிகலையினை அழகாக சொல்லி இருக்குறீர்கள்...

இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்//

மிக அழகான வரிகள்...

ரெவெரி said...

புதுப்பொலிவோடு புலர்ந்த கவிதை...

சி.பி.செந்தில்குமார் said...

>>இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்

நல்ல வர்ணீப்பு

காந்தி பனங்கூர் said...

ஆஹா ஹா, என்ன அருமையான வர்ணிப்புகள். கவிதை அருமை நண்பரே.

rajamelaiyur said...

//
இடை நெளிந்து உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்
//

அருமையான வரிகள்

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை. வாழ்த்துக்கள்.

மாலதி said...

இன்று செயற்கையான எல்லாமே மனிதத்தை மரித்துவிட்டு மனிதத்தை கொன்று கொண்டு இருக்கிறது அதிகாலை நல்ல சிட்டு குருவிகளின் ரீங்காரமும் வண்டுகளின் / குயில் களின் இனிய கூவலும் மறந்து போனது இது மனிதன் மரித்து போவதற்கு ஆயத்தமாகி கொண்டு இருக்கிறான் என்பதை காட்டுகிறது பாராட்டுகள் நன்றி.

தனிமரம் said...

ஒருக்காலும் நின்று பார்த்ததில்லை அதிகாலைப்பொழுதை எல்லாம் அவசர உலகத்தில் ஓடுகின்றோம் கவிதை அழகாய் இருக்கு வாழ்த்துக்கள்!

சக்தி கல்வி மையம் said...

அற்புதமான கவிதை..
பாராட்டுகள் மறுபடியும்..

பிரணவன் said...

இயற்கையின் ஒவ்வொரு செயல்பாடும் அழகுதான். . .அருமை. . .

sarujan said...

படிக்க படிக்க தோன்றும் கவிதை. பல நாட்கள் அவதானத்தின் படைப்பு.அருமை அருமை மச்சி

மாய உலகம் said...
This comment has been removed by the author.
Unknown said...

அருமை வாழ்த்துக்கள்

Anonymous said...

மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது கவி அழகன். வார்த்தை அமைப்புகள் மிக முனனேறியுள்ளது. வாழ்த்துகள் மேலும் உயரவும்.....
வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

அதிகாலைப்பொழுதைவைத்து அழகான கவிதை வரிகள் .வாழ்த்துக்கள் சகோ .அவசியம் இன்று என் தளத்திற்கு வாருங்கள் .மறக்காமல் ஓட்டுக்களையும் போட்டிருங்க .நன்றி சகோ பகிர்வுக்கு .

சிந்தையின் சிதறல்கள் said...

அழகிய கவிதை தோழா அசத்திட்டிங்க வாழ்த்துகள்

இத்தளத்தில் கவிதைப்போட்டி அதில் நீ்ஙகளும் கலந்து வென்றிட வாழ்த்துகிறேன் http://www.chenaitamilulaa.net/ இணைந்து நட்போடு கலந்திடுங்கள்

Anonymous said...

அழகான விவரிப்பு அதிகாலையின் உயிர்ப்பு

வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஒருக்காலும் நின்றதில்லைஃஃஃ

எல்லாம் இயற்கையின் இயக்கமல்லவா ?

Anonymous said...

ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
நிம்மதியாய் ரசித்ததில்லை
அழகாக புலர்கின்ற அந்த
அதிகாலை பொழுதுதனை !!

Marc said...

கவிதை அருமை வாழ்த்துகள்

எஸ்.மதி said...

கொஞ்சல் தமிழில் கவிதை அசத்தல்
வாழ்த்துக்கள் . என் வாழ்த்துகளும்
அறிமுகம் செய்த கவிஞர் மதுமதிக்கு அண்ணனுக்கும் என் நன்றியும்.
என் காதல் தேசத்துக்கும் உங்களை வரவேற்கிறேன்