7/29/2014

நீ பெண்மையன்றோ


விடிவெள்ளி விழுங்கிய 

கண்கள் இரண்டில் 
மின்னலை சேர்த்துவைத்த 
பெண்மை சொண்டில் 
வெண்ணிலா விளையாடும் 
வானவெளியில் 
வெட்கத்தை விலைபேசிடும் 
உன் கன்ன குழிகள் 

என்னவென்று சொல்லுவேன் 
என் நெஞ்சத்து ஊஞ்சலை 
அது தள்ளாடி விழுகிறது 
பெண்மையின் சோலையில் 
மகரந்தம் தெளித்திடும் 
போதை மலர் தேனில் 
நான் மயங்குகிறேன் தயங்குகிறேன்
காதலெனும் சிறு தீவில் 

மடியாத இடையினிலே 
மடியை வைத்து 
விடியாத வேளையிலே 
விருந்து கொண்டு 
சிணுங்காத உன்தேகம் 
நெளிந்து கொள்ள 
நான் சிலுர்கின்றேன் சிரிக்கின்றேன் 
வெற்றி கண்டு 

தவம் கொண்ட முனிவனும் 
தவறி விழுவான் - உன் 
முகம் கொண்ட மௌனத்தை 
கண்டுவிட்டால் 
நான் தினம் சாகும் 
புது மோகம் உன்னிடத்தில் இருந்தும் 
சினக்காமல் இருகின்றாய் 
நீ பெண்மையன்றோ