11/27/2010

கார்த்திகையில் ஒரு தீபம் மனதில் ஏற்றுவோம்


வட துருவத்தில்
ஓளி அணைந்ததால்
உலகிலேயே இருள் சூழ்ந்தது

நீர் சொரியும்
கண்களிலேலாம்
ஒரு ஒருவம் தெரிந்தது

இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்

இதயம் எல்லாம்
ஓளி ஏற்றும்
உலகம் படைத்தவன்

அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்

கார்த்திகையில்
ஒரு தீபம்
மனதில் ஏற்றுவோம்

11/25/2010

உன்னில் தலைசாயா ஆசையடா


முற்றத்து மரங்களிலே
முக்கனிகள் பழுத்திருக்க
சுற்றத்து கண்களெல்லாம்
கனி பறிக்க காத்திருக்க

ஊர் சுற்ற வந்த மச்சான்
எனை பறித்து போனதென்ன
என் மனதிற்குள் புகுந்ததென்ன
மனசோடு சேர்ந்ததென்ன

மரம் சுற்றும் கிளிகளெல்லாம்
பழம் தின்ன வந்ததென்ன
உனைப்பார்த்த பின்னாடி
மனம் மாறிப்போனதென்ன

தலைவாசல் ஓரத்தில்
விழி பார்த்து வீற்றிருந்தேன்
உன் வழிகான காத்திருந்தேன்
உன் மனம் சேர தவமிருந்தேன்

கிளி பார்த்த போதினிலே
கனி ஆசை கொள்ளுதடா
எனைக்கடிகாமல் விடுவாயோ
தவிப்பாக உள்ளதடா

உன்னில் தலைசாயா ஆசையடா

11/22/2010

காதலின் குழந்தைகள் சொர்க்கத்திற்கு சொந்தமாக


இளம் கீற்றின் சுகம்
காற்றின் வழி வந்து
விழி மூட

இதயத்தின் இசைமீட்டல்
மெல் இதமாக
சுகம் சேர்க்க

என் சுவாசக்காற்று
உன் உடல் வருடி
சிலிர்க்கவைக்க

காதலின் குழந்தைகள்
சொர்க்கத்திற்கு
சொந்தமாக

????????????????
???????????
??????

காலையில் சூரியன்
உத்திதான்
சோம்பல் முறித்து

11/17/2010

வாழ்விலும் நீயே சாவிலும் நீயேநித்தமும் உன்னை தொட்டிடதானே
நெஞ்சினில் காதல் வளர்த்தேன்

சொல்வதும் ஒன்று செய்வதும் ஒன்று
இதழ் கூப்பிடதானே துடித்தேன்

பெண்மையே உன்னை போற்றிடதனே
கண்களின் இமைக்குள் வைத்தேன்

பிறந்ததும் எனக்கு வளர்ந்ததும் எனக்கு
உன்னை தாங்கிடும் பொறுப்பை ஏற்றேன்

சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்

வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

11/14/2010

இதயம் வரை காதல்என் படுக்கையறை
கனவுகளின் தோட்டம்
நீண்ட இரவுகள்
வேதனையின் ஆளம்

இரு விழிகளும்
சூரியனின் சொந்தம்
இதயம் வரை
காதலின் வேதம்

இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும்

11/09/2010

வசியமில்லா காதலால் ருசிக்கமுடியா இரவுகள்கடல் புரண்டு தரையானாலும்
மனம் உடைந்து துரும்பானாலும்
பிடிவாத குணம் படைத்தாய்
பிழையானத்தை ஏன் தொடுத்தாய்

உடலிலே ஒன்றுமில்லை
மனசும் உணர்வும் இரண்டும் உண்மை
தடையாக ஏன் நினைத்தாய்
தடுக்காமல் ஏன் துடித்தாய்

பிரிவென்றால் விருப்பமில்லை
சேர்ந்துவாழ முடியவில்லை
எதற்காக் இணைத்துக்கொண்டாய்
இணைந்தபின் ஏன் உதைந்தாய்

கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .