4/25/2011

பிறந்தவர் இறந்தவர் - இறந்தவர் பிறந்தவர்


தோன்றலும் மறைத்தலும்
வாழ்கையின் நியதி
தோன்றினால் வாழ்வது
இயற்கையின் விதிப்படி

தோன்றமுன் இறப்பது
கருப்பையினுடன் முடிகிறது
வாழ்ந்தபின் இறப்பது
சுடலைவரை செல்கிறது

வாழ்ந்தபின் இறந்தவர்
பாவத்துடன் மறைகிறார்
தோன்றும்போதே இறந்தவர்
பாவமாகவே பிறக்கிறார்

வாழ்வதை நோக்கி
பிறந்திடும் உயிர்கள்
சாவது வரும்வரை
வாழ்வது இல்லை

விடுதலை வேண்டி
இறந்திடும் உயிர்கள்
இறந்த பின் கூட
சுதந்திரம் இல்லை

சுற்றுகின்ற சூட்சுமத்தில்
சிக்கிவிடும் உயிர்கள்
தத்தளிக்கும் நிகழ்வே
பிறப்புதும் இறப்பதும்

4/17/2011

ஊணமுற்ற நிர்வாணம்


முடிவு செய்யப்பட மூச்சுக்காற்று
வரையறுக்கப்பட்ட மூக்குத்துவாரம்
வாயைத்திந்தால் மரண வெடி
மனிதர்களை மந்தையாக்கும்
மாண்புமிகு அரசியல்
மனித உரிமையின் பிறப்பிடத்தில்
கருச்சிதைவு
மறக்கமுடியா மனித படுகொலையை
வரவேற்க்கும் நாடுகள்
என்றைக்கும் சுயநலத்தில்
உயிர் குடிக்கும்
முற்ற நிர்வாணம்

4/10/2011

நான் செத்து செத்து பிழைக்கிறேன்


நான் நினைத்த காதல்
நீ அறிந்த போதும்

நானத்தில் குனிந்து
கோலம் இட்ட போதும்

தேன் இனிக்கும் உதட்டில்
தீந் தமிழ் நழுவும் போதும்

குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்

காணமுடியா இடை
தாளமிடும் போதும்

காற்றிலே சேலை
வானவில்லான போதும்

நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்

4/03/2011

கொதித்திடும் இரத்தம் கொள்

உயிர் கொண்டு எழும்பு
உன் உரத்தினை கூட்டு
எதிர்கொள்ளும் தடைகளை
எதிர்த்து நீ தாக்கு

நெஞ்சத்தில் உறுதிகொள்
உன் நேர்மையை உணர்ந்துகொள்
பஞ்ச்சத்தில் இருந்தாலும்
உன் பாதையை நினைவுகொள்

சிவந்திடும் கண்கள் வை
சீறிடும் சொற்கள் செய்
நரம்புகள் நாடிகள் எல்லாம்
கொதித்திடும் இரத்தம் கொள்

நீண்டதோர் பார்வை காண்
நிலைத்திடும் சிந்தை கேள்
நினைப்பதை செய்துமுடி
நிமிர்ந்திடும் உந்தன் கொடி