11/28/2012

கார்த்திகை தெய்வங்களுக்கு ஒரு கவிதை


கார்த்திகை என்றதும் கண்களில் ஈரம்
மாவீர சொந்தங்களின் கல்லறை ஓரம்
களத்திலே காட்டிய வீரங்கள் எத்தனை – எம்
கண்மணிகள் தூங்கிடும் கல்லறைகள் அத்தனை

தீபங்கள் ஏற்றி பூசைகள் செய்வோம் – எம்
தேசத்தின் புயல்களை நெஞ்சிலே வைப்போம்
கார்திகை நாயகர்களின் கண்களில் எல்லாம்
ஈழத்தின் விடுதலை இலட்சியம் காண்போம்

தலைவனின் வழியில் காளத்திலே நின்று
கனவினை முடிக்கும் தைரியம்கொண்டு
புயலென பாய்ந்து போரினைசெய்தீர்
நெஞ்சிலே பாய்ந்த குண்டினால் மடிந்தீர்   

ஒருமுறை உங்களுடன் பேசிடவேண்டும்
மறுபடி கண்களை திறந்திட வேண்டும்
ஒரு பிடி சோற்றை உண்டிட வேண்டும்
என் விரல்களை சூப்பியே கைகளிவிட வேண்டும்

தெய்வங்களே

ஒருமுறை உங்களுடன் பேசிடவேண்டும்
மறுபடி கண்களை திறந்திட வேண்டும்
ஒரு பிடி சோறை உண்டிட வேண்டும்
என் விரல்களை சூப்பியே கைகளிவிட வேண்டும்

11/17/2012

வாராயோ மழையே நான் நனையஅப்பனும் ஆத்தாளும் நினைத்ததில்லை
தாங்கள் பெத்து போட்டது எனக்கேண்டு
அம்மணமாய் அலையும் போதும் தெரியவில்லை
நான் தான் உனக்கு அவனெண்டு

பள்ளியிலும் உன்னை பார்க்கவில்லை
பழகி பேச நீ பக்கத்தில் இல்லை
எனக்கெண்டே உன்னை அலங்கரிக்கவில்லை -  இருந்தும்
வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை

முழு நிலவுக்குள் ஒரு பிறை நுதல்
பிறைகளின் கீழ் இரு நட்சத்திரம்
நட்சத்திர தோட்டத்தில் ரோஜா இதழ்
நாணத்தில் கவுளும் கன்ன மடல்

வளைந்திட்ட நதியாய் உடல் நெளிய
நொடிகின்ற அளவில் இடை தெரிய
கலைந்திட்ட முகிலாய் முடி தழுவ
வாராயோ மழையே நான் நனைய