2/08/2009

2/01/2009

உயிர் யாருக்கும் சொந்தமாகலாம்.


................................................................

நெருப்பின் கண்களை குருடாக்கி

அநியாயம் நடக்கிறது

பொய்களை உண்மையாக்கி

ஊமை மனங்களை நெருக்கிறது

உதடுகள் பேச துடிக்கும் போது

கண்கள் தடுக்கிறது

கண்களால் தானே காண முடிகிறது

உண்மைகளை கூட கொல்வதை

உடல்கள் எங்களுக்கு தான் சொந்தம் - ஆனால்

உயிர் யாருக்கும் சொந்தமாகலாம்.
.............................................................................

இருவருக்கும் காதல்


...........................

நுழைவாயில் தெரியாமல்

உட்புகுந்த காதல்

களவாட தெரியாமல்

களவெடுத்த இதயம்

தொடங்கியது யார்? தொலைந்தது யார்?

பார்த்தது எங்கே? புகுந்தது எப்போ?

இருவருக்கும் தெரியாது

ஆனாலும் இனிக்கிறது வாழ்க்கை

................................

யாருக்கும் தைரியம் இல்லை

.............................

பொங்கிவரும் இதயக்குமுறல்

கண்களுக்கால் வடியும் போது

ஆறுதல் சொல்ல

யாருக்கும் தைரியம் இல்லை

விம்மி வெடிக்கும் நினைவுகளை

தொண்டைக்குழிக்குள் உமிழ்ந்து விட்டு

ஆதரவுக்கரம் நீட்ட

வார்த்தைகளால் தேடுகிறோம்

உதடுகள் மட்டும் உச்சரிககிள்றது

உண்மையில் நானும் அழுகின்றேன்.

....................................

இறுகிய வாழ்க்கை

.....................................

முறுக்கெடுத்து புடைக்கும் உடலின்

வலி யாருக்கு தெரியும்

சிவந்த கண்களின் இரவுகள்

ஏத்தனையாய் இருக்கும்

நினைத்துக்கொண்டே வாழ்ந்த நாட்கள்

அரைவாசி நாட்காட்டியில்

அலைந்த திரிந்த கால்களுக்கு

தெரியும் முட்களின் எண்ணிக்கை

நிம்மதி இழந்த நாட்களுககு விளங்கும்

நிமிடங்கள் கடக்கப்பட்ட பாடு

ஒரு துளி கண்ணீர் வர

எவ்வளவு கஸ்ரப்பட வேண்டும்

உடலும் இறுகி மனமும் இறுகிய

எங்கள் வாழ்க்கைக்கு

.....................................

உனக்கு ஒருநாள் புரியும்

..............................

குமுறி வெடிக்கும் இதயம்

சாவை நோக்கிஅழைக்கிறது

நெருப்பு நீரில் குளித்தெழும்ப

மனம் என்னை இழுக்கிறது

நினைத்துக்கூடப் பார்க்கவில்லை

நிம்மதி தந்தவள்

நிறுத்திவிடுவால் என்று

காற்று நின்று இதயம் அடித்து

கண்கள் மூடும்வேளை

கானல் நீராய்ப்போன வாழ்க்கை

குறுகிப்போய்விடும்

என் உடல் கருகிப்போய்விடும்

உடல் எரியும் சாம்பல் மேட்டில்

ஊளை இட்டு நாய் வாலை ஆட்டும்

காதல் நிலைத்தது எனக்காட்ட

காலால் கிளறும் என் இதயத்தை

ஆப்பொழுது தெரியும்

நாய்க்குத்தெரிந்தது

எனக்குத்தெரியவில்லையே என்று

.....................................

இருப்பிடம் எங்கே


................................

எனக்கான இருப்பிடம் எங்கே?

சிதைந்து போன வாழ்க்கையில்

எனக்கு நான் யார்?

மற்றவர்களுக்கு நான் எதுக்கு?

என்னால் என்ன செய்ய முடியம்?

உலக உருண்டையில் ஒரு புள்ளிக்கோலம்

யாருக்கு தேவை?

வெற்றிடம் நிரப்பவா

நான் உருவெடுத்தேன்

பிறவிப்பெருங்கடலில் பிறவி எதுக்கு?

நான் இல்லை என்றால்

என்ன நடக்கும்

சிரிக்காதீர்

எல்லாம் நடக்கும் என்னைத்தவிர.

.....................................

பிறவிப்பெருங்கடல்

.....................

இருக்கும்வரைதான்

இதயம் துடிக்கம்

இமைகள் அடிக்கும்

உதடுகள் சிரிக்கும்

இறந்தபின்பு

ர் மொய்கும்

............................

உயிரில் கலந்த காதல்

...........................

மணல் மண்பரப்பில்
இமை மடல் மடித்து
இதயத்தை எழுதி இடமாற்றினாய்

* * * * * * *

தக்கன பிழைப்பது போல்
திக்கென பதித்துவிட்டாய் உயிரிலே

* * * * * * *

ஊரிலே ஒவ்வொரு காதலும்
விசாரணைக்கு
நம் காதல்மட்டும் அஞ்ஞானவாசம்

* * * * * * *

இதயமிருந்தால் போதும்
உயிரில் கலந்த
காதலுக்கு

...............................

சோகக்கதை


.......................

உலகிலேயே மிகச்சிறிய

காதல்கதை

நான் அவளை காதலிப்பது

உலகிலேயே மிகப்பெரிய

சோகக்கதை

அவள் இன்னொருவனை

காதலிப்பது

.............................

நினைப்பாளா ?

................................

மூன்று முறை தும்மிய நண்பன்

தன்னவள் நினைக்கிறாள் என்றான்

நான் மூக்குக்குள் தும்பைவிட்டு

என்னவளை நினைக்கப்பண்ணினேன்

................................

இலட்சியத் தோல்வி

......................

சூரியனுக்கு கண்ணீர்

வருமா

வந்தாலும் அது

தண்ணீராக விழுமா
....................