5/29/2015

பக்கத்தில் வந்தாலே


பக்கத்தில் வந்தாலே 
முத்தத்தில் நனைகிறேன் 
வெக்கத்தில் வீழ்ந்து -நான்
சொர்க்கத்திக் சாகிறேன் 

மிச்சங்கள் வைக்காமல் 
மச்சங்கள் எண்ணுகிறாய் 
மொத்தத்தில் பிடிச்சிருக்கு - உன் மூச்சு 
சத்தத்தில் வாழ்வுகொடு

5/25/2015

மறைக்க நினைத்தால்

மறைக்க நினைத்தால் 
கனக்க நினைக்க தோன்றும்
உண்மை சொன்னால் 
மனது அமைதிகொள்ளும்

5/22/2015

என் காதல் இரவு

என் காதல் இரவு
மலர்கள் பூத்து
காத்து கிடக்கும்
மாலை நேரத்தில்
வண்டுகள் தேன்முட்டி
மயங்கி கிடக்கும்
அந்தி நேரத்தில்
உன் கை பிடித்து
கூட்டிசெல்வேன்
பூங்காவுக்கு
கல்லில் செய்த கதிரையில்
கைகள் இரண்டும்பற்ற
கதைகள் பேசுவேன் - உன்
கண்களையே நான் பார்ப்பேன்
சின்ன சின்ன சினுங்களும்
குட்டி குட்டி கோவமும்
மெல்ல தோளில் சாய்தலும்
எல்லாம் சேர்ந்து ஒரு காதலாய்
விட்டு கொடுக்கா பேச்சுக்களும்
கிட்ட வந்து முட்டி நிப்பதும்
சொட்ட சொட்ட
தேன் ஊரும் சொண்டுகளும்
சூரியனையயே கண்ணடித்து
மறைத்துவிடும் கடலுக்குள்
மெல்ல காலால் கோலமும்
மெல் கூந்தல்
கையில் சிக்குவதும்
தீண்ட ஏங்கி
எல்லை தாண்டா நிப்பதும்
வேண்டுமென்றே
தோள் முட்டி கதைப்பதும்
வேதம் சொல்லும் காதலாக
மாலை மறைந்து
கண்கள் இருட்ட
மனமே இல்லாமல்
கால்கள் எழும்ப
வீடு செல்லும் வேளையில் - என்னை
விட்டு சென்றாய் சாலையில்
அந்த நினைவுகளுடன்
என் காதல் இரவு
காத்திருக்கும் விடியலுக்காய்

5/18/2015

என் தாய் மண்ணே

தேசங்கள் தாண்டி நீ 
வாழ்ந்தாலும் - என்
சுவாசங்கள் தோறும்
உன் ஞாபகம்

என் தாய் மண்ணே

5/15/2015

தானை தலைவன் சிந்தனைகள்

காலாற கடலோரம்
நடை போட வந்தேன்
கடலைகள் கதைகொண்டு 
கரைதேடி வந்தது
நிலையான தீர்வொன்று
எமக்கிங்கு கிடைக்காதாம்
நிம்மதியாய் ஊர்ப்பக்கம்
தலை காட்ட முடியாதாம்
ஆட்சி மாற்றம் நடந்தாலும்
பேச்சில் மாற்றம் இல்லையாம்
அரிசி விலை குறைந்தாலும்
அடிமை நிலை மாறாதாம்
போட்டி போட்டு பலநாடுகள்
தேடி ஓடி வருகினமாம்
வேட்டி கூட இல்லாமல்
போகும் நிலை உண்டாகுமாம்
உலகத்து நாடுகளில்
ஊறுகாயாம் எங்களினம்
தேவைக்கு தொட்டுவிட்டு 
இல்லையென்றால் விட்டுவிடுமாம்
யாரோ யாரோ சொன்னதுக்கெல்லாம்
தலையை ஆட்டும் அரசியலாம்
தானை தலைவன் சிந்தனைகள்
தலைகீழாய் கிடக்கிறதாம்
வசதி வாய்ப்பு வந்ததுமே
உரிமை எல்லாம் மறந்து போச்சாம்
கட்டி வச்சு அடிச்சாலும்
சோறு போட்டால் சந்தோசமாம்
கரை தொட்டு வந்த அலைகள்
நுரை கக்கி சொன்னதெல்லாம்
வரி கட்டி சொல்லிவிட்டேன்
உண்மை பொய் யார் அறிவார்

5/11/2015

துடிக்காத இதயத்தை

துடிக்காத இதயத்தை 
எதற்காக பறித்தாய் 
நான் வலிக்கமலே 
சாகிறேன் 

5/08/2015

என் இதயம்

இன்னும் நுழையவில்லை
இதயத்துக்குள்
உன் சுவாசக்காற்று
இருந்தும் துடிக்கிறது
என் இதயம்
உன் உயிரைக்கேட்டு

5/06/2015

இனியது தமிழ் காதல்


அமிழ்தினும் இனியது தமிழ்

அந்த தமிழினும் இனியது
 

காதல்
 

5/04/2015

மறந்துவிடாதே


மறக்காமல்

நான் உனை நினைப்பேன்

என்னை நினைப்பதை

மறந்துவிடாதே
 

உனக்கான காதல் .......

இமைக்காத விழிகளுக்குள்
முழிக்காமல் காத்துக்கிடக்கும் 
உனக்கான காதல் .......
என்றென்றும் !!!!!

5/01/2015

சொத்து சேர்த்து


சொத்து சேர்த்து
சொந்தம் சேர்த்து
சண்டை போட்டு
புகழை சேர்த்து 
கெட்ட குணம்
அனைத்தும் சேர்த்து 
வாழ்ந்து கெட்டு
நோய்கள் சேர்த்து
சாகப்போகும்
நேரத்தில்தான்
வாழத்தோன்றும்
மனிதனுக்கு

காதல்

என்னில் நீ 
அன்பாக இருக்கும்போது
ஆயிரம் பொய் சொன்னேன்
என்னை நீ வெறுக்கும்போது 
ஒரு உண்மை சொல்லுகின்றேன் 
காதல்