10/12/2013

வெட்கப்பட தெரியாமல்

தெரியாமல்
வெட்கப்பட தெரியாமல்
வெட்ட வெளிச்சத்தில் வெட்கி
காதலை காட்டிகொடுத்துவிடாயே

மௌனமொழி பேசும் கண்கள்
காந்த விழியை கவர்ந்து
நாணத்தை உடல்பரவி
நரம்புகளை நெளியவைத்துவிட்டனவோ

இல்லாத இடை
எங்கிருந்து முளைத்தது உனக்கு
அது தள்ளாடி நிப்பதை
என்னெவென்று சொல்ல்வது

பாத விரல்களில் எப்போ
பேனா முளைத்தது
பார்க்காமலே கோலம்போட
யார் சொல்லி தந்தது

உதடு கடிக்கும் அளவுக்கு
உனக்கு என்னடி வெட்கம் – பாவம்
ஒத்தடம் கொடுப்பதற்கு – அது
தேடுகிறது ஒரு சொந்தம்

குளிரில் தானே புல்லரிக்குமென்றாய்
கையில் இருக்கும் சிறு ரோமங்கள்
இந்த வெயில்ளிலும் புல்லரிக்கின்றனவே
ஏன் கூர் கொண்ட பார்வையாளா

கிட்டவரும் போதே
முட்ட வருகிறேனென்று எண்ணுகிறாய்
தொட்டு பார்க்குமுன்பே
கையை தட்டி பறிக்கிறாய்

தெரியவில்லையா நான் இன்னும்
கிட்டவே வரவில்லை என்று  
வெட்கப்பட தெரியாமலேயே
வெட்குகிராயே .........








10/06/2013

காதல்

சாலையோர சருகுகள் புருபுருக்கின்றன 
நீயும் நானும் கைகோர்த்து நடக்கையில் 

மரங்கள் அசையாமல் ஒளிந்திருந்து பார்க்கின்றன 

உனக்கு நான் முத்தம் தருகையில்

அப்பொழுது 


கிளையிலிருந்த ஒரு குருவி 

மெல்ல எழும்பி பறக்கிறது 
தான் கோவித்து விட்டுவந்த ஜோடியை தேடி 

காதல்

_________