10/27/2010

நீ ஆணாக பிறந்ததனால் அப்படி என்ன கண்டுவிட்டாய்

உதட்டோரம் விழுவதெல்லாம்
உணர்வுள்ள வார்த்தைகளே
என் கழுத்தோடு கொடிகட்டி
துணையாக தொட்டது ஏன்

உனக்காக மாறவேண்டும் என
நீ எதற்காக நினைக்கின்றாய்
நீ ஆணாக பிறந்ததனால்
அப்படி என்ன கண்டுவிட்டாய்

எனக்கென்று தனி உணர்வு
அதற்குள்ளே பெரும் கனவு
அதை உணரக்கூட தெரியாமல்
ஆணாக ஏன் பிறந்தாய்

உடலிலே வலிமை கொண்டு
உணர்விலே வன்மைகொண்டு
அழகான பெண்மை என்னை
அடக்கி ஆள ஏன் வந்தாய்

மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன்

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

23 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

/////மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன் ////
அண்ணா பெண்மையின் அவலத்தை புடம் போட்டுக் காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.. பொறுங்க குத்த வேண்டியதை குத்திப் போட்டு நாளை வாறன்...

அன்பரசன் said...

//உடலிலே வலிமை கொண்டு
உணர்விலே வன்மைகொண்டு
அழகான பெண்மை என்னை
அடக்கி ஆழ ஏன் வந்தாய் //

சூப்பர்

வினோ said...

/ மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன் /

அருமை யாதவன்...

Sriakila said...

அருமையானக் கவிதை!

பெண்களின் உள்ளுணர்வுகளை எழுத்தாக மாற்றியுள்ளீர்கள். ஒரு பெண்ணாக சந்தோஷப்படுகிறேன்.

பிரியமுடன் ரமேஷ் said...

அருமை யாதவன்...

நிலாமதி said...

மிக மிக அருமை .வார்த்தைகளை எங்கே கடன் வாங்குகிறீர்கள். பாராடுக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஆணாக இருந்து கொண்டு பெண்ணுக்கு சப்போர்ட்டா கவிதை எழுதுவது அபூர்வம்,அருமை.

எனக்கென்று தனி உணர்வு
அதட்க்குள்ளே பெரும் கனவு

இந்த லைனில் அதற்குள்ளே என வர வேணும்னு நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

அழகான பெண்மை என்னை
அடக்கி ஆழ ஏன் வந்தாய்

இதில் அடக்கி ஆள என வரவேண்டும்

யாதவன் said...

சி.பி.செந்தில்குமார் நன்றி உங்கள் திருத்தங்களுக்கு, மாற்றிவிடேன் உங்கள் வழிகாட்டல் தொடரட்டும் ஏன் கவிதை வளரட்டும்

யாதவன் said...

நன்றி உங்கள் கருத்துக்களுக்கு, கருத்துக்கள் தொடரட்டும் ஏன் கவிதை வளரட்டும்

வெறும்பய said...

அருமை நண்பரே..

சௌந்தர் said...

மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன்/////

இந்த வரிகள் அருமையா இருக்கு

Lakshman said...

பெண் நெஞ்சம் புதிர் அதை போல எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
பெண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
ஆண்கள் மதிப்பதே இல்லை........
மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை

Anonymous said...

Yathavan,

Yes, it's very nice poem. As others commented, you trying to show some issues in the community used powerful words and structured it nicely.

I am trying to see what is the message you are going to give to the community, positively?

In the first para you directly ask a question,Why we got maried? Then you try to give asnwer in the 2nd and 3rd para through raising some valuable questions indirectly;

In the second and third para - first two sentences, Are mutual understanding and adjustment necessary for good family life?

Yes but answer is not given

In the second and third para – last two sentences, these questions will not help to resolve the disparity between husband and wife. Raise the question other way around and imagine how will you answer? Can you????

Forth para, what is the message?
Make a para with last two sentences from the first and forth para and see the contradiction

Last para, it’s very hard. It says, indirectly, I can live without community/ society. Better if you could say how we can enjoy the family life as husband and wife.

sakthi said...

மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன்


அருமையான வரிகள் யாதவா

யாதவன் said...
This comment has been removed by the author.
மைந்தன் சிவா said...

என்ன பாஸ் அந்த பக்கம் போய் நிண்டு கவிதை விடுறீங்க??ஏதும் சிம்பதி கிரியேசன்'ஆ?
கவிதை அருமை யாதவன்

யாதவன் said...

ம.தி.சுதா,அன்பரசன் ,வினோ,Sriakila ,பிரியமுடன் ரமேஷ், நிலாமதி சி.பி.செந்தில்குமார்,வெறும்பய,சௌந்தர்,Lakshman Anonymous,sakthi மைந்தன் சிவா நன்றி உங்கள் கருத்துக்களுக்கு

Anonymous said...

மேலும் பல தமிழ் கவிதை, கட்டுரைகளுக்கு நட்பூ (www.natpu.in) இணைய இதழை பார்க்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

நேசமுடன் ஹாசிம் said...

அருமை நண்பா உண்மைகள் அத்தனையும்

பிரஷா said...

அருமை நண்பரே.. வாழ்த்தக்கள்

பாரத்... பாரதி... said...

//மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன் //