10/15/2016

வெட்கத்திரையை கிழித்தவனே

பெண்-
பெண்மையின் வெட்கத்திரையை கிழித்தவனே
வெட்கமின்றி என்னை கட்டி அணைத்தவனே
விரல் நிகம் கீறி அடையாளம் தந்தவனே
என் உயிர்மீது உனைத்தந்து வளர்த்தவனே.

ஆண்-
திமிர்பொங்கும் அழகோடு நின்றவளே
என் திறமையைக்காட்ட வழிசமைத்தவளே
தலையணையோடு தவழ்ந்து திரிந்தவளே
எனை தவறாமல் அணைக்கும்
மந்திரியே.

பெண்-
உயிரோடு உயிர் சேரும் நேரமெல்லாம்
உனை உறவாக நினைத்து மகிழந்தேனே
இனி வாழ்வில் எல்லாம் நீதான் என்று 
என் இதயத்தை பரிசாக தந்தேனே.

ஆண்-
கனவோடு நான் வாழ்ந்த வாழ்க்கையினை
நியமாக்க நேராக வந்தவளே 
உனை என்னோடு எனக்குள்ளே வைத்திருந்து
என் கண்ணாக உனை காப்பேனே.No comments: