10/16/2016

அவன் அன்று இறைவன்

கண்ணை மூடும் கறுப்பு வானம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று
*********
அடங்கிப்போகும் அவசர உலகம்
ஓய்வு எடுக்கும் இடைவெளி நேரம்
குடும்பம் கூடும் நிலவு முற்றம்
ஊரை கெடுக்கும் குடிகாரன் சத்தம்
************
குறைகளை சொல்லும் மனைவியின் நேரம்
தேவையை கேட்கும் பிள்ளையின் சிணுங்கல்
கணக்கு பார்க்கும் அப்பனின் மூளை
போர்வைக்குள் அடங்கும் இயலாமை யுத்தம்
*************
தலையணை மந்திரம் சொல்லிடும் இரவு
தரணியை ஆள போட்டிடும் கணக்கு
கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு
***************
வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்

No comments: