9/14/2012

கடவுளுக்கே அன்னையேசொற்ப காசில்

சோறு திங்கும்

அற்ப வேலையாம்

குப்பை அள்ளுதலை

நித்தம் செய்யினும்

நெஞ்சை நிமித்திடும்

வீரப் பெண் இவள்

உயிரை மதிப்பவள்


உடம்பின் உள்ளே

இதயம் இருக்கும்

இதயத் துடிப்பில்

மனிதம் பிறக்கும்

எச்சங்களை

துச்சம் என

குப்பைக்குள்ளே

கொட்டினாலும்


கண்களிலே

கருணை சேர்த்து

நெஞ்சினிலே

தாய்மை வழிந்து

தன் கைகளாலே

அணைத்தெடுத்து

அம்மாவாகிய

பெண்மையே


நீ

கடவுளுக்கே

அன்னையே

நான் வணங்கிறேன்

உன்னையே

9 comments:

வரலாற்று சுவடுகள் said...

//நீ கடவுளுக்கே அன்னையே நான் வணங்கிறேன் உன்னையே//

நல்ல வரிகள் சகோ!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு பக்கம் மனம் நெகிழ்ந்தாலும் சிறப்பிற்கு மேலும் சிறப்பு செய்கிறது வரிகள்... அருமை...

ஹேமா said...

அம்மா என்னும்போதே மனம் நெகிழும்.கண் காணும் தெய்வம் அவளுக்கான வரிகள் அருமை !

மகேந்திரன் said...

கண்முன்னே நடமாடும்
பெற்றெடுத்த தெய்வத்திற்கு
அழகான கவிதை...

விமலன் said...

///கடவுளுக்கே அன்னையே வணங்குகிறேன் உன்னையே///நல்ல வரிகள் வாழ்த்துக்கள்/

Anonymous said...

தாய்மையின் பெருமை சொல்லும் வரிகள் .
நன்று நல்வாழ்த்து!கவி அழகன்.
வேதா. இலங்காதிலகம்.

விரல்களின் நாதம் said...

தாய்யை பற்றி சொன்ன வார்த்தைகள் மிகவும் அருமையாக உள்ளது

Mohan P said...

தாயின் அர்மைய சொல்லனுமா அருமை சகோ

பூங்கோதை said...

அருமை, வாழ்த்துக்கள்....