10/15/2016

ஒருநாள் எனை திரும்பி பார்ப்பாய் 
அந்நாளில் உதடு கொண்டு சிரிப்பேன்

ஒருநாள் என் முன்னே வந்து போவாய் 
அந்நாளில் கண்ணடித்து பார்ப்பேன்

ஒருநாள் என் அருகில் வந்து நிற்பாய் 
அந்நாளில் உன் கைகோர்த்து நடப்பேன்

ஒருநாள் என் நெஞ்சில் வந்து சாய்வாய் 
அந்நாளில் உன் தலை கோதி விடுவேன்

ஒருநாள் தலையை குனிந்து நிற்பாய் 
அந்நாளில் தாலிகட்டி மகிழ்வேன்

ஒருநாள் வெட்கம் திறந்து நிற்ப்பாய் 
அந்நாளில் என்னை உனக்குள் தருவேன்No comments: