4/27/2015

காதல் துளிர்க்குது

நெஞ்சுக்குள்ளே இதயம் கிடந்தது 
தானாய் துடிக்குது 
இதயத்துக்குள்ளே காதல் வந்து 
தேனாய் வடிக்குது
வடியும் தேனை குடிக்க இங்கு 
பூக்கள் பூக்குது
பூக்கும் மலர்களை வண்டு முட்டி 
மயங்கி கிடக்குது 
மயங்கி கிடக்கும் வண்டின் மீது 
மீசை முளைக்குது 
மீசை முளைத்த ஆசையினாலே 
காதல் துளிர்க்குது

No comments: