4/01/2015

வெட்கம் இன்றி சொல்லி முடிப்பேன்

உன்னை மட்டும் நினைத்துகொண்டே
எந்தன் வாழ்க்கை ஓடி செல்லும்
கண்ணுக்குள்ளே உன்னை வைத்து 
கட்டி பிடித்து தூங்க தோன்றும்

என்னை மட்டும் எங்கே பார்த்தாய் - உன்
கண்களாலே என்ன சொன்னாய்
பெண்மை என்பதை மறந்தே போனேன்
உந்தன் பார்வையால் காதல் ஆனேன்

தனியத்தானே பிறந்து வளர்ந்தேன்
துணையே இன்றி திமிராய் திரிந்தேன் - என்
தனிமைக்குள்ளே எதற்க்காய் நுழைந்தாய்
என் நேரம் எல்லாம் மெதுவாய் பறித்தாய்

நிமிடம் தோரும் உந்தன் நினைப்பு
நிமிர்ந்து பார்த்தால் உந்தன் சிரிப்பு
கனவு தோரும் உந்தன் அணைப்பு
களைத்து விட்டேன் பெண்மை மறந்து

விரல்கள் எல்லாம் நிகங்கள் வளர்த்தேன்
நிகங்கள் எல்லாம் வர்ணம் தெளித்தேன்
அழகு படுத்தி என்னை கொடுத்தேன் - உன்
அன்பின் முன்னாள் நானே தோற்றேன்

வெட்கம் இன்றி சொல்லி முடிப்பேன் - என்
காதல் எல்லாம் அள்ளி கொடுப்பேன்
எனக்குள் உன்னை விதையாய் விதைப்பேன்
என் இதையதுக்குள்ளே துடிக்க வைப்பேன்

No comments: