4/13/2015

பெண்ணாய் உணர்ந்து வெட்கப்பட்டு

சிறுக சிறுக உன்னை நினைத்து
பெருக பெருக ஆசைகொண்டு - நீ
மீண்டும் வீடு திரும்பும்வரைக்கும்
எனக்குள்ளேயே பேசிக்கொண்டு

உனக்கு பிடித்த உணவை செய்து
உன்னை பிடித்த என்னை உணர்ந்து
மெல்ல மெல்ல சிரித்து கொண்டு 
வீடு முழுக்க அழகாய் செய்து

வந்த உடனே கட்டிபிடிக்க
கதவுக்கு பின் ஒளித்து நிக்க
திட்டம் தீட்டி எந்தன் நெஞ்சை
பித்தம் ஏறாமல் காத்து நின்று

வந்த சத்தம் கேட்டதுமே
வளையல் சத்தம் கேக்காமலே
சொன்ன இடத்தில் ஒளிந்துநின்று - என்னை
தேடும்தவிப்பை அழகாய் பார்த்து

பின்னால் சென்று கட்டி பிடித்து
முன்னாள் இழுத்து முத்தம் கொடுத்து
பெண்ணாய் உணர்ந்து வெட்கப்பட்டு
என்னால் முடிந்ததை தந்தேன் உனக்கு

No comments: