4/14/2015

ஏன் வேஷம் மாறி போனது

முட்டி முட்டி பார்க்கிறாய் 
முன்னால் பின்னால் திரியுறாய் 
சிவனே என்று இருந்த என்னை 
சீண்டி காதல் செய்கிறாய்
காதல் என்றால் என்னவென்று 
தெரியாமலே இருந்த என்னை 
ஆசை வார்த்தை சொல்லிக்கொண்டு 
சொன்னதெல்லாம் செய்துகொண்டு 
எந்த நேரம் கூப்பிட்டாலும் 
இல்லை என்று வந்து நின்று 
மனதை கொள்ளை கொண்டு போனாய் 
நான் மயங்கி காதல் சொல்லி போனேன்
என் காதல் சொன்ன பின்னாலே 
சனியன் தலைக்கு ஏறியதோ 
கவனிக்காமல் திரிகின்றாய் - கேட்டால் 
நேரம் இல்லை என்கிறாய்
இத்தனை நாள் நேரம் எல்லாம் 
எங்கிருந்து வந்தது 
காதல் சொன்ன பின்னாலே 
ஏன் வேஷம் மாறி போனது

No comments: