4/20/2015

காத்து கிடக்கிறேன்

இரவு முழுக்க உந்தன் நினைப்பில்
இதயம் தவிக்குது
கண்கள் இரண்டும் மூடிக்கொள்ள
ஏனோ மறுக்குது
நிலவு கூட தூரம் போல
எனக்கு தெரியுது
இருட்டில் கூட உந்தன் உருவம்
தெளிவாய் தெரியுது
என்னை மட்டும் காதல் செய்ய
உன்னை கேக்கிறேன் - என்
உயிரை கூட உனக்காய்த்தர
காத்து கிடக்கிறேன்

No comments: