9/11/2014

அம்மா ......மன்னிப்பு கேக்கின்றேன்மனதோடு மனம் வைத்து
மன்னிப்பு கேக்கின்றேன்
தினம் உன்னை பார்பதற்க்காய்
தெரியாமல் பேசிவிட்டேன்

யாரிடம் நான் போவேன்
அதை யாரிடம் நான் கேட்பேன்
அன்பினில் விளைந்த அம்மாவாய்
உன்னையே நான் பாக்கிறேன்

குழந்தை மனசு கொண்ண்டதனால்
குழப்படிகள் பல செய்துவிட்டேன்
அடம்பிடித்து அழுதுவிழுந்து
அரியண்டம் கொடுத்துவிட்டேன்

பாசத்தை நீ தரவேண்டும் - காக்கை
குஞ்சாக பார்க்கவேண்டும்
கண்மூடி தூங்குவதற்கு - நல்ல
நிம்மதி நீ தரவேண்டும்

No comments: