7/23/2015

அகதி வாழ்க்கை வெளிநாட்டில்

வீடு மேலே கூடு கட்டி
கூடுக்குள்ளே குஞ்சு பொரிச்சு
பாசத்துடன் வளர்த்துவரும்
குருவிபோல இருந்த வாழ்க்கை

கூடு உடைஞ்சு குருவிபறந்து
தேசமெங்கும் சிதறி வாழ்ந்து
பாசத்துக்கை ஏங்கி தவிக்கும்
தனிமை குயில் ஆனதேனோ

சின்னஞ்சிறு வீட்டுக்குள்ளே
சில்லறையாய் நாலு அரிசியுடனெ
கஞ்சி குடித்து வாழ்ந்த காலம்
பஞ்சு மெத்தையில் கிடைத்திடுமோ

சொந்த மண்ணில் முள்ளு வேலி
சொந்தங்களுக்குள் சண்டை போட்டி
சொந்தமாக வீடிருந்தும்
அகதி வாழ்க்கை வெளிநாட்டில்

1 comment:

தனிமரம் said...

அருமையான முடிப்பு!கஞ்சிக்கு இருந்த சந்தோஸம் இன்று பீஷாவில் இல்லை!ம்ம்