2/01/2009

இறுகிய வாழ்க்கை

.....................................

முறுக்கெடுத்து புடைக்கும் உடலின்

வலி யாருக்கு தெரியும்

சிவந்த கண்களின் இரவுகள்

ஏத்தனையாய் இருக்கும்

நினைத்துக்கொண்டே வாழ்ந்த நாட்கள்

அரைவாசி நாட்காட்டியில்

அலைந்த திரிந்த கால்களுக்கு

தெரியும் முட்களின் எண்ணிக்கை

நிம்மதி இழந்த நாட்களுககு விளங்கும்

நிமிடங்கள் கடக்கப்பட்ட பாடு

ஒரு துளி கண்ணீர் வர

எவ்வளவு கஸ்ரப்பட வேண்டும்

உடலும் இறுகி மனமும் இறுகிய

எங்கள் வாழ்க்கைக்கு

.....................................

No comments: