1/19/2009

நினைக்கின்ற உறவுகளே

............................................

இரத்தம் ஊடறுக்கும் நாளங்களில்

பிரிந்த உறவுகளின் உச்சரிப்பு

இதயம் தேடிவரும் வாழ்த்துக்களில்

புன்னகைத்து திறக்கும் உதடு

இமை பாரம் கொண்டு மடல் மூடுகையில்

வஞ்சித்த உருவங்களின் அணிவகுப்பு

எப்போதாவது மடல் வருகையில்

பின்னோக்கி நகர்ந்து விடும் நினவுச்சமாதி

நினைக்கின்ற உறவுகளே போதும்

இருக்கின்ற வாழ்க்கையை கண்டுகளிக்க

..............................................

1 comment:

நிலாமதி said...

மறந்து விடாதே உன்னை நினைக்கவும் ஒரு உறவு வரும் என்று ......முடிவிலும் ஒன்று தொடரலாம். .